12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் சசிகுமார் மீண்டும் இயக்குனராகவுள்ளார். இதுகுறித்த சுவாரசிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவராக சசிகுமார் இருந்து வருகிறார். 2008-ல் வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக சசிகுமார் அறிமுகம் ஆனார்.
சுப்ரமணியபுரம் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் மிகப்பெரும் வெற்றியை அடைந்ததுடன் விருதுகளையும் அள்ளிக் குவித்தது.
இந்தப் படத்தை இந்தி சினிமாவின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப், தனது மிகவும் விருப்பமான படம் என்று கூறியிருந்தார். இதை பார்த்துதான், அவரது மாஸ்டர் பீஸான கேங்ஸ் ஆஃப் வாசிபர் படத்தை எடுத்ததாக அனுராக் குறிப்பிட்டிருந்தார்.
டாக்டரைத் தொடர்ந்து டான் படத்திலும் பிரியங்கா மோகன் இடம்பெற்றது எப்படி? – சிவகார்த்திகேயன் பதில்
சுப்ரமணியபுரம் படத்திற்கு பின்னர் 2010-ல் வெளியான ஈசன் திரைப்படத்தை சசிகுமார் இயக்கினார். இதன்பின்னர் நடிகராக வாய்ப்புகள் குவிந்ததை தொடர்ந்து அவர் நடிப்பில் முழுகவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் மீண்டும் இயக்குனராக வெப்சீரிஸ் ஒன்றை சசிகுமார் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றப் பரம்பரை நாவலின் அடிப்படையில் இந்த வெப்சீரிஸை எடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதையும் படிங்க - தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் தோனி… என்ன ரோல் தெரியுமா?
இந்த தொடரில் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை வீரன் என்ற படத்தின் மூலம் சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். விரைவில் இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.