ரசிகர்களை ஒருங்கிணைத்த அன்பு விஜயகாந்த்... 2k கிட்ஸ்களுக்கு தெரியாத பல தகவல்கள்!

விஜயகாந்த்

இருபத்தைந்து, முப்பது வருடங்களுக்கு முன் கட்சிக் கொடி இல்லாத கிராமங்களிலும் விஜயகாந்த் நற்பணி மன்றம் இருக்கும். விஜயகாந்திடமிருந்து  நேரடியாக உதவிப் பெற்றவர்கள் கிராமத்துக்கு ஓரிருவராவது இருப்பார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
20 கிட்ஸ்களுக்கு விஜயகாந்தை பற்றி அதிகம் தெரியாது. அவரது குணம், ரசிகர்கள் செல்வாக்கு, நற்பணி மீதிருந்த ஆவல், அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஆளுமை என பலவும் தெரியாது. 

இருபத்தைந்து, முப்பது வருடங்களுக்கு முன் கட்சிக் கொடி இல்லாத கிராமங்களிலும் விஜயகாந்த் நற்பணி மன்றம் இருக்கும். விஜயகாந்திடமிருந்து  நேரடியாக உதவிப் பெற்றவர்கள் கிராமத்துக்கு ஓரிருவராவது இருப்பார்கள். குறைந்தபட்சம் சென்னையில் உள்ள விஜயகாந்தின் அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டிருப்பார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களில் எப்போதுமே முதன்மையானவர் விஜயகாந்த். அதற்கு சிறந்த உதாரணம் அன்பு விஜயகாந்த் இதழ்முன்பு நடிகர்களின் பெயரில் அவர்களது ரசிகர்களுக்காக இதழ்கள் வெளியாகும். ரஜினிக்கு ரஜினி ரசிகன், கமலுக்கு மய்யம். மய்யம் முழுக்க கமலின் பார்வையில் இலக்கியச் சாயலுடன் வெளியாகும். ஒருகட்டத்தில் படிக்க ஆளில்லாமலும் நடத்த ஆளில்லாமலும் அது வெளிவருவது தடைபட்டதுரஜினி ரசிகன் முழுக்க தனியாரால் நடத்தப்பட்டது. ரஜினி படம் வெளியாகும் போது, அப்படத்தின் செய்திகள், ப்ளோ அப்புடன் வெளியாகும்.அன்பு விஜயகாந்த் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. முருகப்பன் என்பவர் அதன் ஆசிரியர். அதன் தயாரிப்பு, விநியோகம் எதிலும் விஜயகாந்தின் பங்கில்லை. ஆனால், அதில் வெளிவரும் செய்திகள், பேட்டிகள் அனைத்தும் அவரது மேற்பார்வையிலேயே தயாராகும்.முக்கியமாக முதல் பக்கத்தில் காவிய நாயகன் கடிதம் என்று, விஜயகாந்த் ரசிகர்களுக்கு எழுதும் கடிதம் இடம்பெறும். மின்மினித் தொடர் என்று முக்கியமான தலைவர்கள், ஆளுமைகள் குறித்த விஜயகாந்தின் கட்டுரை வெளியாகும்கடிதத்தையும், கட்டுரையையும் அவர் நேரடியாக எழுத மாட்டார். யாரைப் பற்றி, எதைப் பற்றி, எப்படி வர வேண்டும் என்று டிக்டேட் செய்வார். அதை வைத்து எழுதுவார்கள். பிறகு அது விஜயகாந்தின் அனுமதிக்காக செல்லும். அவர் படித்து கையெழுத்திட்ட பிறகே அவை பிரசுரமாகும்அன்று இணையதளமோ, சமூக வலைதளமோ ஏன் செல்போன்கூட இல்லை. அன்று ரசிகர்களை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியது அன்பு விஜயகாந்த் இதழ். விஜயகாந்த் நடிக்கும் படங்களின் செய்திகள், ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நட்சத்திரங்கள் பேட்டிகள் மட்டுமின்றி, விஜயகாந்த் நற்பணி மன்றத்தினரின் செய்திகள் புகைப்படத்துடன் இடம்பெறும்.

நம்ப மாட்டீர்கள்... ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான மன்றங்களிலிருந்து, அவர்கள் செய்த நற்பணியின் புகைப்படங்கள் அன்பு விஜயகாந்த் அலுவலகத்துக்கு வரும்ஒரு மாதத்து புகைப்படங்களை ஒரே இதழில் போட இயலாது. பகுதி பகுதியாக போடுவார்கள். அப்படியும் ஏராளமான புகைப்படங்கள் தங்கிப் போகும்சினிமா சரித்திரத்தில் தனி நடிகர் ஒருவருக்காக தொடர்ச்சியாக அதிக வருடங்கள் வெளிவந்த இதழ் அன்பு விஜயகாந்தாகவே இருக்கும். இதனை பின்பற்றி விஜய், அஜித் போன்ற இளைய தலைமுறை நடிகர்களுக்கும் ரசிகர் இதழ்கள் வெளியிடப்பட்டன. ஆனால், அன்பு விஜயகாந்த் அளவுக்கு தரத்திலும், செயலிலும் அவற்றால் போட்டியிட முடியவில்லை.

Also read... உடன்பிறப்பே என்ன மாதிரியான கதை? - இயக்குனர் விளக்கம்!

இணையத்தின் வரவு அச்சு ஊடகங்களை நசுக்கிய போது முதலில் பலியானவை இந்த இதழ்கள். இணையத்தில் நொடிக்கு நொடி தகவல்கள் கிடைக்கும் போது மாத இதழ்களுக்கு வேலையில்லாமல் போனது. தமிழகத்தில் எந்த கட்சியும் சாராமல் தனிக்கட்சி தொடங்கி மக்கள் செல்வாக்கு பெற்று ஒரு சில இடங்களை பிடித்த ஒரே நடிகர் விஜயகாந்த்.

அதற்கு காரணமான ரசிகர்களை ஒருங்கிணைத்ததில், உடன் பயணித்ததில் அன்பு விஜயகாந்த் இதழுக்கு பெரும் பங்குண்டு. அப்படியொரு இதழ் இனி எந்த நடிகருக்கும் வாய்க்கப் போவதில்லை என்பதே அன்பு விஜயகாந்தின் தனித்துவம்.
Published by:Vinothini Aandisamy
First published: