• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 அவதார்

அவதார்

அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் படத்தின் அடுத்த நான்கு பாகங்களை வெளியிடவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

  • Share this:
    அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் பலரையும் உற்சாகம் அடைய செய்துள்ளது.

    நாவிகளின் உலகம், தருத் மாதா உள்ளிட்ட பறக்கும் பறவைகள், 7 அடி உயரத்துடன் நீல நிற மனிதர்கள் என கற்பனையில் ஜேம்ஸ் கேமரூன் சொன்ன கதைக்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டம் ஒன்று உருவானது. அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியான 2009-ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் இந்த திரைப்படத்தை காண திரையரங்கிற்கு ரசிகர்கள், புதிய உலகம் ஒன்றுக்கு செந்று திரும்புவது போல உற்சாகமாக படையெடுத்தார்கள்.

    25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் உலகம் முழுக்க 280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலாக வாரி குவித்தது. ஏறத்தாழ ஒரு தசாப்தம் இந்த வசூல் சாதனையை வேறு எந்த ஹாலிவுட் திரைப்படமும் நெருங்க முடியாத சூழல் நிலவி வரும் நிலையில், அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

    மேலும் அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் படத்தின் அடுத்த நான்கு பாகங்களை வெளியிடவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த செய்தி அவதார் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து வெளியாக உள்ள அவதார் திரைப்படம் மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் யாரும் நெருங்க முடியாத வசூல் சாதனைகளை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: