தமிழ் சினிமாவின் சகாப்தங்களான மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் கவியரசு கண்ணதாசன் இருவரின் பிறந்த நாளான இன்று அவர்களின் திரைப்பயணம் பற்றிய சிறப்பு தொகுப்பு.
”கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா…. கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா” என்ற இவர் இசை கேட்டால்…. ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடும் இவரின் பாடல் வரிகளை கேட்டால். ஆம் எம்எஸ்வியின் இசையும் கண்ணதாசனின் வரிகளும் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் பல. இவர்களின் கூட்டணியை அமிழ்தும் தேனும் சேர்ந்த கூட்டணி என மலைத்து லயித்து போயினர் இசை ரசிகர்கள். ’வாராதிருப்பானோ…’, ‘உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா?’, ‘கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா’, ‘துள்ளுவதோ இளமை’, ‘என்ன பார்வை உந்தன் பார்வை’, ‘ரோஜாமலரே ராஜகுமாரி…’, என மனதோடு தங்கும் பாடல்களை படைத்தனர் இந்த ராஜ குமாரர்கள்.
அந்த நிகழ்ச்சிக்கு சித்து - ஸ்ரேயா தான் வரவேண்டும்.. அடம் பிடிக்கும் ரசிகர்கள்!
சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’, ’புதிய பறவை’ திரைப்படத்தில் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’, ’பெரிய இடத்துப்பெண்’ திரைப்படத்தில் ‘அன்று வந்ததும் இதே நிலா’, ’ காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் ‘விஸ்வநாதன் வேலை வேண்டும்’, ‘மலரென்ற முகம் ஒன்று’ போன்ற பாடல்களை வடித்து அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் மட்டுமே ஒலித்து கொண்டிருந்த ஜாஸ் இசையை முதன் முதலாகத் தமிழ் இசை ரசிகர்களின் காதுகளுக்கு கண்ணதாசன் வரிகளோடு விருந்தளித்தார் எம்.எஸ்.வி.

எம்.எஸ்.வி - கண்ணதாசன் இளமைக்காலம்
ஏழு ஸ்வரங்களுக்குள் இசையின் அனைத்து அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டிய எம்.எஸ்.வி மெலடி பாடல்களில் மனதை மயக்குவதும், காதல் பாடல்களில் கனிரசம் சொட்டவும் செய்தது தொடர்கதையானது. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘கேள்வியின் நாயகனே’, ‘வான் நிலா நிலா அல்ல…’, ‘மலர்ந்தும் மலராத பாதிமலர் போல…’, ’அவளுக்கென்ன அழகிய முகம்…’ என சாட்சிக்கு பல நூறு பாடல்கள் காற்றில் இசைந்தாடின
கணவன் - மனைவி இனி ஒரே சேனலில்... ஷபானா - ஆர்யன் ஃபேன்ஸ் பயங்கர ஹேப்பி!
சட்டி சுட்டதடா கை விட்டதடா… சொன்னது நீ தானா...,… ஓடும் மேகங்ளே ஒரு சொல் கேளீரோ....... வசந்தத்தில் ஓர் நாள்..., தெய்வம் தந்த வீடு..., பச்சைக்கிளி முத்துச்சரம்… ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா…. ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.. ’நான் பேச நினைப்பதெல்லாம்… கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?... . ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்… நிலவே என்னிடம் நெருங்காதே..., உள்ளிட்ட பல பாடல்களில் எம் எஸ்வியின் இசையில் லயிப்பதோ அல்லது கண்ணதாசனின் பாடல் வரிகளில் லயிப்பதோ என குழம்ப வைத்தனர் இந்த மாயக்கண்ணன்கள் இருவரும்.
எத்தனை இசைக்கலைஞர்கள் வந்தாலும், எத்தனை பாடல்களை கேட்டாலும், இன்றும் என்றும் ரசிக்கக்கூடிய மறக்க முடியாத இசைக்காவியங்களை படைத்த எம்எஸ்வியும் கண்ணதாசனும் தமிழ் திரை இசையின் இரு கண்கள் என்றால் அது மிகையல்ல.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.