ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மனைவி சாக்‌ஷி எழுதிய கதை.. தமிழில் படமாக தயாரிக்கும் தோனி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மனைவி சாக்‌ஷி எழுதிய கதை.. தமிழில் படமாக தயாரிக்கும் தோனி! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தோனி

தோனி

கிரிக்கெட் வீரர் தோனியின் சினிமா தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தோனியின் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறது.

  விளையாட்டு உலகில் மிகவும் விரும்பப்படும் வீரர்களில் ஒருவராக தோனி இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் தோனி ஆக்டிவாக இல்லாவிட்டாலும்கூட அவரை பின்தொடர்வோர், அவரது ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

  தோனி எண்டெர்டெய்ன்மெண்ட்

  கிரிக்கெட்டில் அவருக்கு ஈடு இணை யாரும் கிடையாது என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். தன்னுடைய ‘தோனி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பாக ரோர் ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் ஹிந்து ஆகிய மூன்று சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்துள்ளார்.

  இந்நிலையில் இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் தமிழ் மொழியில் உருவாகிறது. அத்துடன் தமிழில் உருவாகும் அந்த படத்தை பல மொழிகளிலும் அவர்கள் வெளியிட உள்ளனர். அதற்கான கதையை தோனியின் மனைவி சாக்ஷி தோனி எழுதியுள்ளார். மேலும் அந்தக் கதையை தோனி 3d வடிவில் தற்போது நடித்து வரும் அதர்வா தி ஆர்ஜின் என்ற படத்திற்கான நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்க உள்ளார்.

  இதையும் படிங்க: ராமரின் சக்தி இந்தியாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது - அயோத்தி தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரை

  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தோனியின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.  அத்துடன் தங்களை மொழி சார்ந்த நிறுவனம் என அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.  நமது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இந்திய பார்வையாளர்களை அர்த்தமுள்ள கதைகள் மூலம் சென்றடைவதே தங்களின் முன்னுரிமை எனவும் கூறியுள்ளனர்.

  தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனம் அறிவியல் புனைவு, குற்றவியல் நாடகம், நகைச்சுவை,  சஸ்பென்ஸ் திரில்லர் வகையிலான திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.  மேலும் அதற்காக பல தயாரிப்பாளர்களிடமும் திரைக்கதை ஆசிரியர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

  முன்னதாக,  ஒவ்வொரு மொழியிலும் சில டாப் ஹீரோக்களின் படங்களை தயாரிக்க தோனி திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து விஜய்யுடன் பேசியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Dhoni, Tamil movies