Home /News /entertainment /

சினிமாவுக்கு வரும் சூப்பர் ஹீரோ தோனி...?

சினிமாவுக்கு வரும் சூப்பர் ஹீரோ தோனி...?

தோனி

தோனி

எம்.எஸ். தோனி என்ற பெயர் கிரிக்கெட்டை தாண்டி இந்திய இளைஞர்களிடையே பிரபலம். அவரை ஒரு ஐகான் ஆகவே இந்திய சமூகம் நோக்குகிறது. அவரை வைத்து அதர்வா - தி ஆர்ஜின் என்ற கிராபிக் நாவலை உருவாக்குகின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை வைத்து சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றனர். அதர்வா - தி ஆர்ஜின் கிராபிக் நாவலுக்காக இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. நாவலின் மைய கதாபாத்திரமே டோனிதான்.

எம்.எஸ். தோனி என்ற பெயர் கிரிக்கெட்டை தாண்டி இந்திய இளைஞர்களிடையே பிரபலம். அவரை ஒரு ஐகான் ஆகவே இந்திய சமூகம் நோக்குகிறது. அவரை வைத்து அதர்வா - தி ஆர்ஜின் என்ற கிராபிக் நாவலை உருவாக்குகின்றனர். இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இதில் தோனியை சூப்பர் ஹீரோவாக சித்தரித்திருக்கிறார்கள்.

மேற்குலகுக்கு அதிலும் 400 வருடங்களுக்குள் பாரம்பரியம் உள்ள அமெரிக்காவில்தான் சூப்பர் ஹீரோக்களுக்கு அதிக மவுசு. இந்தியாவில் சூப்பர் ஹீரோக்கள் செல்லுபடியாக எளிய வழி, ஏற்கனவே இங்கு நிலவும் புராண கதாபாத்திரங்களின் சாயலில் சூப்பர் ஹீரோக்களை உருவாக்குவது. அப்படித்தான் இதிலும் தோனியின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கதையை ரமேஷ் தமிழ்மணி எழுதியுள்ளார். இந்த நாவலுக்காக ஏறக்குறைய 200 ஓவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நாவல் குறித்து பேசியிருக்கும் தோனி, "இது ஒரு பிரமாண்டமான புதிய முயற்சி. இதில் நானும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.. இந்த கிராபிக் நாவல் அனைவரையும் கவரும் கதையும் அற்புதமான கலைத்தன்மையும் கொண்டதாக இருக்கும். தொலைநோக்குப் பார்வையுடன் ரமேஷ் தமிழ்மணி இந்த கதையை எழுதியுள்ளார். அவர் சொன்ன ஐடியா பிடித்திருந்ததால் உடனே சம்மதித்தேன்" என கூறியுள்ளார்.

Also read... சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான பத்து தல, வெந்து தணிந்தது காடு படங்களின் புதிய போஸ்டர்!
பொதுவாக கிராபிக் நாவல் வெற்றி அடையும்போது அது திரைப்படமாகவும் எடுக்கப்படும். தோனியை சூப்பர் ஹீரோவாக கொண்டு வெளிவர இருக்கும் இந்த கிராபிக் நாவல் பெறப்போகும் வரவேற்பை பொருத்து இந்த நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்படும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Dhoni

அடுத்த செய்தி