Home /News /entertainment /

தோனி முதல் தனுஷ் வரை பிரபலங்கள் விரும்பி அணியும் டி-ஷர்ட் - விலையைக் கேட்டா தலை சுத்திடும்!

தோனி முதல் தனுஷ் வரை பிரபலங்கள் விரும்பி அணியும் டி-ஷர்ட் - விலையைக் கேட்டா தலை சுத்திடும்!

அல்லு அர்ஜுன் - தோனி

அல்லு அர்ஜுன் - தோனி

Balmain பிராண்ட் டி-ஷர்ட்களின் விலை அதன் வகைகளைப் பொறுத்து ரூபாய் நாற்பத்தைந்தாயிரம் முதல் ஐம்பத்தைந்தாயிரம் வரை இருக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமா நடிகர்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் மத்தியில் ட்ரெண்டியான ஒரு டி-ஷர்ட் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    அந்த டி-ஷர்ட்டின் விலை ரூபாய் 50,000. இது நெட்டிசன்கள் மத்தியிலும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் அணியும் உடைகள் தான் ரசிகர்கள் மத்தியில் ஃபேஷன் ட்ரெண்டாக மாறும்.

    சிம்பிள் ஆனால் எலிகண்டாக இருக்கும் பால்மெய்ன் டி-ஷர்ட்டுகள் மீது பிரபலங்களின் மோகம் அதிகரித்து வருகிறது. பிரபலமான பால்மெய்ன் லோகோவுடன் கூடிய கருப்பு நிற டி-ஷர்ட்டை தமிழ் சினிமாவைச் சேர்ந்த சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு மற்றும் விக்னேஷ் சிவன், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த அல்லு அர்ஜுன், பாலிவுட்டில் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான், விளையாட்டுத் துறையில் எம்.எஸ்.தோனி ஆகியோர் அணிந்துள்ளனர்.

    ரஜினி காந்தின் தலைவர் 169 படத்தில் பிரியங்கா மோகன்? அதுவும் இந்த கதாபாத்திரத்திலா?

    Balmain என்பது பாரிஸை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு நிறுவனம். இங்கு உயர்தர சட்டைகள், ஜாக்கெட்டுகள் மற்றும் அக்ஸசெரீஸ் தயாரிக்கப்படுகிறது. இத்தாலி, சீனா, ஜப்பான், பல்கேரியா, போர்ச்சுகல் மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் பால்மெய்ன் நிறுவனம் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. தனது தயாரிப்புகளை உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்கு இறக்குமதியும் செய்கிறது. முக்கியமாக பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்களால் மட்டுமே பால்மெய்ன் தயாரிப்புகளை வாங்க முடியும்.

    வடிவேலுவுக்கு மாபெரும் வரவேற்பு அளித்த மாமன்னன் படக்குழு!

    Balmain பிராண்ட் டி-ஷர்ட்களின் விலை அதன் வகைகளைப் பொறுத்து ரூபாய் நாற்பத்தைந்தாயிரம் முதல் ஐம்பத்தைந்தாயிரம் வரை இருக்கும். ஜாக்கெட் போன்ற சில தயாரிப்புகள் ஒவ்வொன்றும் ஐந்து லட்சம் மற்றும் அதற்கு அதிகமாகவும் இருக்கும்.

    ms dhoni dhanush simbu sivakarthikeyan wearing 50000 rs balmain t shirts, balmain t-shirt, balmain ms dhoni, balmain dhanush, balmain sivakarthikeyan, balmain simbu, balmain price, பால்மெய்ன் டிஷர்ட், பால்மெயின் டி ஷர்ட் விலை, balmain in india, balmain shoes, balmain watches, balmain bags, balmain pronunciation, balmain men's, balmain dubai, balmain paris, balmain paris t-shirt, balmain paris t-shirt price india, balmain paris t-shirt black gold, balmain paris t-shirt india, balmain paris t-shirt white, balmain paris t-shirt online india, balmain paris white shirt, balmain paris t-shirt amazon, balmain t-shirt first copy, balmain

    சாமானியர்கள் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்கள் பால்மெயின் டி-ஷர்ட்டுகளை அணிவதைப் பார்த்து குறைந்த பட்சம் மகிழ்ச்சி கொள்ள முடியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Dhanush, MS Dhoni, Simbu, Sivakarthikeyan

    அடுத்த செய்தி