• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sandeep Nahar: சுஷாந்த் சிங் உடன் தோனி பயோபிக்கில் நடித்த மற்றொரு நடிகரும் தற்கொலை

Sandeep Nahar: சுஷாந்த் சிங் உடன் தோனி பயோபிக்கில் நடித்த மற்றொரு நடிகரும் தற்கொலை

சந்தீப் நஹார்

சந்தீப் நஹார்

தோனி படத்தில் சுஷாந்த் சிங்கின் நண்பராக நடித்த நடிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பையில் அவர் தங்கியிருந்த வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மறைவு பாலிவுட்டில் பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திரையுலகினரும், ரசிகர்களும் சுஷாந்தின் மரணத்தையே இன்னும் ஜீரணிக்க முடியாமல் இருக்கும் நிலையில் அதே படத்தில் சுஷாந்தின் நண்பராக நடித்த சந்தீப் நஹார் என்பவர் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மும்பை கோரேகான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த சந்தீப் நஹர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு செய்து கொள்வதற்கு முன்பாக தனது இறுக்கமான மனநிலை குறித்து வீடியோ பதிவிட்டிருக்கும் அவர் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட பிரச்னைகள், திருமணத்தில் இருந்த சிக்கல் குறித்து பேசியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் தன் மரணத்துக்கு தன் மனைவியை குறை கூறக்கூடாது என்றும் தெரிவித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தீப் நஹாரின் மரணத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: