அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

முன்னதாக வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பிங்க் பட ரீமேக் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் | சிவகார்த்திகேயன்
  • News18
  • Last Updated: February 13, 2019, 7:35 PM IST
  • Share this:
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர். லோக்கல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சீமராஜா படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படம் காமெடி என்டெர்டெயினராக உருவாகிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில் படம் மே 1-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பிங்க் பட ரீமேக் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் படமும் அதேநாளில் ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.





படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை தன்வீ ஃபிலிம்ஸ் உடன் இணைந்து சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் இதற்கு முன்னதாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை திருச்சி மற்றும் தஞ்சையில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியிருந்தது.

காதல் மன்னன் அஜித் வளர்ந்த கதை - வீடியோ

First published: February 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்