நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா, தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக 21-வது நபராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.
2-வது வாரம் முதல் ஒவ்வொரு வாரமும் ஓட்டிங் அடிப்படையில் ஒரு போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இறுதி வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வென்ற அமுதவாணன் உடன், அசீம், கதிரவன், ஷிவின், விக்ரமன் மைனா நந்தினி என 6 பேர் இருந்தனர். இதில் கதிரவன் மற்றும் அமுதவாணன் இருவரும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை தொடர்ந்து நந்தினியை புது விதமாக வாரத்தின் நடுவிலேயே பிக்பாஸ் எலிமினேட் செய்து வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்.
அதனை தொடர்ந்து விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் மட்டும் இறுதியாக இருந்தனர். இவர்களில் யார் வெற்றியடைவார்கள் என்று சோஷியல் மீடியாக்களில் பல களேபரங்களே நடந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று வெளியான ஃபைனலில்ஸ் அசீம் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களை தரக்குறைவாக நடத்தி, எதற்கெடுத்தாலும் கத்தி சண்டை போட்டுக் கொண்டே இருந்த அசீமுக்கு டைட்டில் கொடுப்பட்டது தவறான முன்னுதாரணம் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்தனர்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே டாஸ்க்கின்போது ஏற்படும் பிரச்னைகளில் விக்ரமன் அதிகமாக யார் பாதிக்கப்பட்டுள்ளாரோ அவருடையே பக்கம் நின்றே பேசினார். பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டு வாரம்கூட இருக்க மாட்டார் என்று பேசப்பட்ட விக்ரமன் 105 நாட்களும் இருந்து தனது கருத்துகளை எதற்கும் அஞ்சாமல் வெளிப்படுத்தினார் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலர் பராட்டுகளை தெரிவித்துள்ள்னர். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது கமலும் பல முறை விக்ரமனின் செயல்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பேத்கர் திடலுக்கு
வருகை தந்த தம்பி @RVikraman அவர்களை வரவேற்று வாழ்த்தினேன். பொழுது போக்குத் தளமெனினும் அதனைக் கருத்தியல் களமாக்கிய சாதனையைப் பாராட்டினேன். நீங்கள் #TITLE_WINNER அல்ல; #TOTAL_WINNER என ஆரத்தழுவி மெச்சினேன். ஆடைபோர்த்தி அறவேந்தன் சிலை பரிசளித்தேன்.#BiggBoss pic.twitter.com/oGut10ceq4
— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 26, 2023
இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் விக்ரமன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த தம்பி விக்ரமனை வரவேற்று வாழ்த்தினேன். பொழுதுபோக்குத் தளமெனினும் அதனைக் கருத்தியல் களமாக்கிய சாதனையைப் பாராட்டினேன். நீங்கள் #TITLE_WINNER அல்ல; #TOTAL_WINNER என ஆரத்தழுவி மெச்சினேன். ஆடைபோர்த்தி அறவேந்தன் சிலை பரிசளித்தேன்” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
Also read... 'லவ் டுடே' நாயகி.. ஹரிஷ் கல்யாண் ஹீரோ.! முதல் படத்தை அறிவித்த தோனி தயாரிப்பு நிறுவனம்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.