Home /News /entertainment /

AK 61-க்காக தயாராகிவரும் மவுண்ட்ரோடு அரங்கு!

AK 61-க்காக தயாராகிவரும் மவுண்ட்ரோடு அரங்கு!

 அஜித்

அஜித்

அஜித்துக்காக வினோத் வலிமையை எடுத்தார். அதனால் தான் வலிமையின் திரைக்கதை வினோத்தின் முந்தைய படங்களைப் போல் சிறப்பாக இல்லாமல் பலவீனமாக இருந்தது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அஜித்தின் புதிய படத்துக்காக ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்கு தயாராகி வருகிறது.

அஜித்தின் 60-வது படம் வெளியான நிலையில், அஜித்தின் அடுத்தப் படம் குறித்து அறிவிக்கப்பட்டது. அஜித்தின் முந்தைய இரு படங்களை இயக்கிய வினோத்தே இந்தப் படத்தையும் இயக்குகிறார். அதேபோல் முந்தைய இரு படங்களை தயாரித்த போனி கபூரே இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். இதற்காக ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்கு தயாராகி வருகிறது.

அஜித்தின் 61-வது படத்துக்காக மவுண்ட் ரோடு போன்ற அரங்கை அமைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மவுண்ட் ரோட்டில் படத்தின் பிரதான காட்சிகள் நடப்பதாக கதை எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்கின்றன தகவல்கள்.

ஸ்ரீபிரியா மகள் சினேகா திருமணம்... விழாவை சிறப்பித்த 80'ஸ் பிரபலங்கள்!

வினோத் அஜித்திடம் முதலில் கூறிய கதையைதான் இப்போது எடுக்க இருக்கிறார்கள். இந்தக் கதையை அவர்கூறிய போதுதான் முதலில் பிங்க் இந்திப் படத்தை தமிழில் ரீமேக் செய்த பின் இந்தக் கதையில் நடிக்கலாம் என்றார் அஜித். அதன்படி நேர்கொண்ட பார்வை தயாரானது. அந்தப் படத்துக்குப் பின் பைக் ரேஸ் பின்னணியில், அம்மா சென்டிமெண்டுடன் அஜித் சொன்ன கதை தான் வலிமை. அஜித்துக்காக வினோத் வலிமையை எடுத்தார். அதனால் தான் வலிமையின் திரைக்கதை வினோத்தின் முந்தைய படங்களைப் போல் சிறப்பாக இல்லாமல் பலவீனமாக இருந்தது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இனி எடுக்கப் போவதுதான் வினோத் முதலில் அஜித்திடம் சொன்ன கதை. இதில் நெகடிவ் ஷேட் கொண்ட வேடத்தில் அஜித் நடிக்க உள்ளார்.

ரியாக்‌ஷன்களால் ரசிகர்களை கவரும் எக்ஸ்பிரஷன்ஸ் குயின்

அஜித் தற்போது முழுக்க நரைத்த தாடி, தலைமுடியுடன் இருக்கிறார். தாடியும் மார்பை தொடும் அளவுக்கு உள்ளது. இந்த கெட்டப்பில் அவர் படத்தில் தோன்றுவாரா இல்லை, படத்திற்கு வேறு கெட்டப்பா என்பது தெரியவில்லை. படப்பிடிப்பு ஆரம்பமாகும் நாளில் படம் குறித்த மேலும் பல தகவல்கள் தெரியவரலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Ajith

அடுத்த செய்தி