ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் டிவி-யின் பல ஹிட் சீரியல்களின் இயக்குநர் மரணம் - சோகத்தில் சின்னத்திரை

விஜய் டிவி-யின் பல ஹிட் சீரியல்களின் இயக்குநர் மரணம் - சோகத்தில் சின்னத்திரை

சீரியல் இயக்குநர் தாய் செல்வம்

சீரியல் இயக்குநர் தாய் செல்வம்

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான நியூட்டனின் மூன்றாம் விதி என்ற படத்தையும் இயக்கியிருந்தார் தாய் செல்வம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மெளனராகம், நாம் இருவர் நமக்கு இருவர், ஈரமான ரோஜாவே 2 ஆகிய சீரியல்களை இயக்கிய தாய் செல்வம் மரணமடைந்தது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஏப்ரல் 2017 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பான சீரியல் மெளனராகம். இசை குடும்பக் கதை பின்னணியை கொண்ட இந்த தொடர் வங்காளி மொழி தொடரான 'போட்டால் குமார் கான்வலா' எனும் சீரியலின் ரீமேக். இந்தத் தொடரை தாய் செல்வம் இயக்க, கிருத்திகா, ஷெரின், ஷமிதா ஸ்ரீகுமார், ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித் போன்ற பலர் நடித்திருந்தனர்.

அதே போல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான மற்றொரு பிரபலமான சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இதில் செந்தில் இரு வேடங்களில் நடிக்க, அவர்களுக்கு ஜோடியாக ரக்‌ஷா மற்றும் ரேஷ்மி நடித்திருந்தனர். இதனையும் தாய் செல்வம் இயக்கியிருந்தார். தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலையும் இயக்கி வருகிறார். அதோடு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான நியூட்டனின் மூன்றாம் விதி என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.

கடந்த வாரம் திருமணம்... இப்போது விவாகரத்து... ஹன்சிகா குடும்பத்தில் நேர்ந்த சோகம்

இந்நிலையில் தற்போது தாய் செல்வம் மரணமடைந்துள்ளார். இந்த செய்தி சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial