கடந்த வார இறுதியில் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட திரைப்படங்கள்!

கடந்த வார இறுதியில் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட திரைப்படங்கள்!

கர்ணன் - சுல்தான்

கடந்த வார இறுதியில் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட திரைப்படங்கள் குறித்த ஒரு தொகுப்பை இங்கே குறிப்பிடுகிறோம்.

 • Share this:
  கடந்த வார இறுதியில் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்ட திரைப்படங்கள் குறித்த ஒரு தொகுப்பை இங்கே குறிப்பிடுகிறோம்.

  ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை டஜன் கணக்கில் திரைப்படங்கள் வெளியாகி பிஸியாக இருந்த தமிழ் சினிமா தற்போது ஊரடங்கு உள்ளிட்ட நெருக்கடிகளால் கடினமான காலகட்டத்தை சந்தித்துள்ளது. மாஸ்டர் திரைப்படத்திற்குப் பின்னர் கர்ணன் திரைப்படம் மட்டுமே ஓரளவு ரசிகர்களை திரையரங்கை நோக்கி ஈர்த்துள்ள நிலையில் கடந்த வாரத்தில் அதிகம் பேசப்பட்ட திரைப்படங்களில் பரமபத விளையாட்டு திரைப்படம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

  திருஞானம் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி ரிலீசாக வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் பல்வேறு நெருக்கடிகளால் தற்போது வெளிவந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. த்ரிஷா நடிப்பில் முன்னர் வெளியான நாயகி உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ச்சியாக மற்றொரு தோல்வி திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. இதேபோல SMS, OKOK திரைப்படங்களின் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள வணக்கம் டா மாப்ள திரைப்படமும் நேரடி ஓடிடி ரிலீசாக வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, இசை அமைத்து உள்ள 99 சாங்ஸ் திரைப்படமும் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறாதது ஏ ஆர் ரகுமான் ரசிகர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் ஏமாற்றமாக உள்ளது.

  உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள காட்சில்லா vs காங் திரைப்படம் தமிழ் திரை அரங்க உரிமையாளர்களுக்கு ஓரளவு ஆறுதலாக அமைந்துள்ளது. உலகம் முழுக்க 2000 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி உள்ள இந்த திரைப்படம் இந்தியாவில் 50 கோடி வசூலை கடந்துள்ளது. இதேபோல கார்த்தி நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த சுல்தான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படம் மூன்று வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற போதிலும் கர்ணன் திரைப்படம் கணிசமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறது. இதுவரை 40 கோடிக்கும் அதிக வசூல் ஈட்டி உள்ள கர்ணன் திரைப்படம் ஊரடங்கு தளர்வு களால் விருந்து திரைப் படங்களும் வெளியாக வாய்ப்பு குறைவு என்பதால் இன்னும் சில வாரங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: