ஊரடங்கில் நடிகைகள் விரும்பிப் பார்த்த திரைப்படம்!

அதுல்யா | அஞ்சலி | யாசிகா

திரைப்பட படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் நடிகர்கள் குடும்பத்தினருடன் வீட்டில் தங்கி தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

 • Share this:
  ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள நடிகைகள் பலரும் தாராள பிரபு திரைப்படத்தை பார்த்து ரசித்ததாக சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

  கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

  அலுவலகத்தில் பணியாற்றும் பலரும் வீட்டிலிருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். திரைப்பட படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் நடிகர்கள் குடும்பத்தினருடன் வீட்டில் தங்கி தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் வீட்டில் இருக்கு நடிகைகள் யாசிகா ஆனந்த், ஜனனி, அஞ்சலி, அதுல்யா ரவி, சாக்‌ஷி அகர்வால், விஜே ரம்யா, ரம்யா பாண்டியன் டிவி நடிகை ஷிவானி கிருஷ்ணன் உள்ளிட்டோர் விக்கிடோனர் என்ற பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்காக வெளிவந்திருக்கும் தாராள பிரபு திரைப்படத்தை பார்த்து ரசித்ததாக தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

  கடந்த மார்ச் 13-ம் தேதி வெளியான இத்திரைப்படம் மூன்று நாட்கள் மட்டுமே திரையரங்கில் ஓடியது. பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையரங்குகள் மூடப்பட்டன. இயல்புநிலை திரும்பிய பிறகு மீண்டும் தாராள பிரபு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 9-ம் தேதி முதல் அமேஸான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  அறிமுக இயக்குநர் கிருஷ்ண மாரிமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக், தன்யா ஹோப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் தாராள பிரபு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க: ‘வைரஸாக வந்து பாடம் புகட்டிவிட்டாய்’... வடிவேலுவின் உருக்கமான கொரோனா பாடல்!
  Published by:Sheik Hanifah
  First published: