கே.ஜி.எஃப். 2 படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் கூட்டணியில் உருவாகி வரும் சலார் படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
கே.ஜி.எஃப் மற்றும் கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்களை கொடுத்து, இந்தியாவின் டாப் 3 இயக்குனர்களில் ஒருவராக பிரசாந்த் நீல் மாறியுள்ளார். இவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள்.
கே.ஜி.எஃப் 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிரபாஸுடன் சலார், கே.ஜி.எஃப் 3 மற்றும் ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படம் என தற்போது 3 படங்களில் பிரசாந்த் நீல் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி 2025ம் ஆண்டு வரையில் அவர் பிஸியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப் 2 படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து கே.ஜி.எஃப். 3 எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. இதுகுறித்த சூப்பர் அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க - கே.ஜி.எஃப் 3 ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர்...
இதற்கிடையே, கே.ஜி.எஃப். 2 படத்தின் ஷூட்டிங் முடிந்த பின்னர் பாகுபலி நாயகன் பிரபாசுடன் சலார் என்ற படத்தில் பிரசாந்த் நீல் இணைந்தார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில் சலார் படத்தின் சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் பிரபாஸின் ரசிகர்கள் உற்சாகமும் நம்பிக்கையும் அடைந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி சலார் படத்தின் 35 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. வரும் அக்டோபர் மாதத்திற்கு முன்பாக ஷூட்டிங்கை முடித்து விட்டு 2023 ஏப்ரல் அல்லது மே மாதம் சலார் படத்தை களத்தில் இறக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க - தளபதி 66 அப்டேட் : விஜய்யின் அம்மா கேரக்டரில் நடிப்பவர் இவர்தானா?
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னர் பிரபாஸின் நடிப்பில் வெளியான சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. இதனால் கேஜிஎஃப் டைக்ரடருடன் பிரபாஸ் இணைந்திருக்கும் சலார் படத்தின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.