முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / #BeastTrailer : சரவெடியாய் வெளியானது 'பீஸ்ட்' ட்ரெய்லர்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

#BeastTrailer : சரவெடியாய் வெளியானது 'பீஸ்ட்' ட்ரெய்லர்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

மாலை 6 மணிக்கு ட்ரெய்லர் வெளியானதை தொடர்ந்து, பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் ட்ரெய்லர் திரையிடப்பட்டது.

மாலை 6 மணிக்கு ட்ரெய்லர் வெளியானதை தொடர்ந்து, பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் ட்ரெய்லர் திரையிடப்பட்டது.

மாலை 6 மணிக்கு ட்ரெய்லர் வெளியானதை தொடர்ந்து, பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் ட்ரெய்லர் திரையிடப்பட்டது.

  • Last Updated :

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் இருப்பதாக ட்ரெய்லரை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் திரையரங்கு ஒப்பந்த வர்த்தகம் தற்போது சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் பீஸ்ட் திரைப்படம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் படத்தின் இயக்குனர் நெல்சன் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருந்தது.

வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் இந்திய உளவுத்துறை ஏஜென்ட் கதாபாத்திரத்தில் முதல்முறை விஜய் நடித்துள்ளதாகவும் நெல்சன் கூறிய தகவல்களால், படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இந்நிலையில் பீஸ்ட் ட்ரெய்லர் எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பீஸ்ட் ட்ரெய்லரை பார்க்க...

' isDesktop="true" id="725368" youtubeid="0E1kVRRi6lk" category="cinema">

ஏற்கனவே வெளியான அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் யூடியூபில் ரிக்கார்டுகளை உருவாக்கி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரும் புதிய ரிக்கார்டுகளை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

top videos

    6 மணிக்கு வெளியானதை தொடர்ந்து பெரும்பாலான திரையரங்குகளில் உடனுக்குடன் ட்ரெய்லர் திரையிடப்பட்டதால், சினிமா ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.

    First published:

    Tags: Beast