ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரமாண்டத்தின் உச்சம்... எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் 'அவதார்' படத்தின் டீசர் ரிலீஸ்

பிரமாண்டத்தின் உச்சம்... எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் 'அவதார்' படத்தின் டீசர் ரிலீஸ்

அவதார் 2 டீசரில் வரும் காட்சி.

அவதார் 2 டீசரில் வரும் காட்சி.

அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அவதார் : தி வே ஆஃப் வாட்டர் படத்தின் டீசர் இன்று வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் 2009-ல் வெளியானது. அப்போது, உலகம் முழுவதும் இந்த திரைப்படத்தை காண சென்ற சினிமா ரசிகர்கள், புதிய உலகம் ஒன்றுக்கு செல்வது போல் உற்சாகமாக படையெடுத்தனர்.

அவதார் முதல் பாகத்தில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் கற்பனைத் திறன் மற்றும் பிரமாண்ட காட்சிப்படுத்துதல் ஆகியவை, உலக சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்தன. இதனால் அடுத்த பாகங்கள் எப்போது வரும் என்ற ஆவல் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருந்தது.

இதையும் படிங்க - உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான 'நெஞ்சுக்கு நீதி' பட ட்ரெய்லர் வெளியீடு...

25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட அவதார் முதல் பாகம் உலகம் முழுக்க 280 கோடி அமெரிக்க டாலர்களை வசூலாக வாரி குவித்தது. ஏறத்தாழ ஒரு தசாப்தம் இந்த வசூல் சாதனையை வேறு எந்த ஹாலிவுட் திரைப்படமும் நெருங்க முடியாத சூழல் நிலவி வரும் நிலையில், அவதார் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அவதார் படத்தின் 2வது பாகமான அவதார் : தி வே ஆஃப் வாட்டர் படத்தின் டீசர் இன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியாவை பொருத்தளவில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 6 மொழிகளில் அவதார் : தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளியாகிறது. இதையொட்டி வெளியிடப்பட்ட போஸ்டர் மிகவும் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அவதார் பட முதல் போஸ்டர்.

இதற்கு முன்பாக அவதார் முதல் பாகத்தை செப்டம்பர் மாதம் திரையிடுவதற்கு படத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Published by:Musthak
First published:

Tags: Hollywood