Home /News /entertainment /

3 நாட்களில் ரூ. 100 கோடி... வசூல் மழையில் வலிமை

3 நாட்களில் ரூ. 100 கோடி... வசூல் மழையில் வலிமை

ஆக்சன் காட்சிகள் அற்புதமாக இருந்தாலும், சென்டிமென்ட் காட்சிகள் வலியப் புகுத்தப்பட்டதாக இருந்ததென விமர்சனங்கள் எழுந்தன.

ஆக்சன் காட்சிகள் அற்புதமாக இருந்தாலும், சென்டிமென்ட் காட்சிகள் வலியப் புகுத்தப்பட்டதாக இருந்ததென விமர்சனங்கள் எழுந்தன.

ஆக்சன் காட்சிகள் அற்புதமாக இருந்தாலும், சென்டிமென்ட் காட்சிகள் வலியப் புகுத்தப்பட்டதாக இருந்ததென விமர்சனங்கள் எழுந்தன.

    அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வலிமை திரைப்படம் 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.

    பண்டிகைகள் இல்லாத நேரத்தில் வெளியாகி ஒரு படம் இந்த அளவுக்கு வசூலித்திருப்பது என்பது இதுவே முதன்முறை என, சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    நடப்பாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக வலிமை அமைந்துள்ளது. சுமார் 3 மணி நேரம் ஓடும் படமாக வலிமை முதலில் வெளிவந்தது. இதில், படத்தின் வேகத்திற்கு தடை போடும் காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

    இதையும் படிங்க - கமலின் விக்ரம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது...!

    இதையடுத்து படக்குழுவினர் 15 நிமிட காட்சியை கத்தரித்துள்ளனர். தற்போது ட்ரிம் செய்யப்பட்ட வலிமைதான் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

    ஆக்சன் காட்சிகள் அற்புதமாக இருந்தாலும், சென்டிமென்ட் காட்சிகள் வலியப் புகுத்தப்பட்டதாக இருந்ததென விமர்சனங்கள் எழுந்தன. ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

    இதையும் படிங்க - வலிமை முதல்நாள் வசூல் எவ்வளவு? அஜித் படம் படைத்த புதிய சாதனை

    இந்நிலையில், படம் வெளிவந்த வியாழன், வெள்ளி, சனி ஆகிய தினங்களில் மட்டும் வலிமை ரூ. 100 கோடி அளவுக்கு வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரமும் பெரிய பங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், வலிமையின் வசூல் வேட்டை இந்த வாரமும், அடுத்த வாரமும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Valimai

    அடுத்த செய்தி