முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Shruti Haasan: சமந்தாவை பின்னுக்குத் தள்ளி சாதனைப் படைத்த ஸ்ருதி ஹாசன்!

Shruti Haasan: சமந்தாவை பின்னுக்குத் தள்ளி சாதனைப் படைத்த ஸ்ருதி ஹாசன்!

ஸ்ருதி ஹாசன் - சமந்தா

ஸ்ருதி ஹாசன் - சமந்தா

ஸ்ருதிஹாசன் தமிழை விட தெலுங்கில் அதிகப் படங்களில் நடிக்கிறார். தமிழில் அவர் கைவசம் உள்ள ஒரே படம், எஸ்.பி.ஜனநாதனின் லாபம்.

  • Last Updated :

ஹைதராபத் டைம்ஸின் 2020-ஆம் ஆண்டின் அதிகம் விரும்பப்பட்ட பெண் டைட்டிலை வென்றிருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இந்த டைட்டிலுக்கு அவருடன் போட்டியிட்டவர்களில் சமந்தா, பூஜா ஹெக்டே, ரகுல் ப்ரீத் சிங், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

ஸ்ருதிஹாசன் தமிழை விட தெலுங்கில் அதிகப் படங்களில் நடிக்கிறார். தமிழில் அவர் கைவசம் உள்ள ஒரே படம், எஸ்.பி.ஜனநாதனின் லாபம். தெலுங்கில் இந்த வருடம் அவரது நடிப்பில் வக்கீல் சாப் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த வருடம் வெளியான மற்றுமொரு தெலுங்குப் படம் ரவி தேஜாவின் க்ராக். இந்தியில் தி பவர் படத்திலும் நடித்திருந்தார். பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகிவரும் சலார் திரைப்படத்திலும் ஸ்ருதியே நாயகி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் ஹைதராபாத் டைம்ஸின், 2020-ம் வருடத்தின் அதிகம் விரும்பப்பட்ட பெண் டைட்டிலுக்கு ஸ்ருதி தேர்வாகியுள்ளார். இந்தப் போட்டியில் இருந்த பிற நடிகைகளில் பூஜா ஹெக்டே, அகில் அக்னியேனியுடன் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படத்திலும், பிரபாஸுடன் ராதே ஷ்யாம் படத்திலும், ராம் சரணுடன் ஆச்சார்யா படத்திலும் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 65 படத்திலும் இவரே நாயகி. இவை தவிர இரு இந்திப் படங்களும் உள்ளன. இன்னொரு நடிகையான ராஷ்மிகா மந்தனா சுல்தானில் நடித்தவர். அல்லு அர்ஜுனுடன் புஷ்பா படத்திலும், வேறு இரு இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். சமந்தாவைப் பற்றி கூற வேண்டியதில்லை. தி பேமிலி மேன் சீஸன் 2 ஒன்றே போதும். தற்போது ஸ்ருதியைவிட லைம் லைட்டில் இருப்பவர்கள் இவர்கள். இவர்களை முந்திக் கொண்டு டைட்டிலை ஸ்ருதி கைப்பற்றியிருப்பதுதான் ஆச்சரியம்.

கொடூரமான நேர்மையுடன் இருப்பது தான் இந்த டைட்டில் கிடைக்க காரணமாக இருக்கலாம் என ஸ்ருதி கூறியுள்ளார். 'ஒரு காலத்தில் மது அருந்துவேன். அது பிரச்சனையான பிறகு விட்டுவிட்டேன்,' 'அம்மாவும், அப்பாவும் பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சி தான்' என்று பல பர்சனல் விஷயங்களை பப்ளிக்காக ஸ்ருதி பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actress Samantha, Actress shruti Haasan