தமிழ்நாட்டுல மட்டும் தான் மதத்தை வச்சு ஓட்டு வாங்க முடியல... நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ ட்ரெய்லர் ரிலீஸ்

Mookuthi Amman | Nayanthara நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை கதையாக உருவாக்கி கன்னியாகுமரி மற்றும் சென்னையில் படமாக்கியுள்ளது படக்குழு.

நயன்தாரா அம்மனாக காட்சி அளித்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. நான் நோன்புக் கஞ்சியை குடிப்பேன். புனித அப்பத்தை புசிப்பேன் ஆனால் ஒரு போதும் ஆடி மாதம் ஊற்றும் கூழை குடிக்கவே மாட்டேன் என்ற வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லரில் நீட் தேர்வு, மதத்தை வைத்து அரசியல் செய்வது உள்ளிட்ட சமகால பிரச்னைகளும் பேசப்பட்டுள்ளன.


ட்ரெய்லரின் ஒரு காட்சியில் தமிழகத்தில் மட்டும் தான் மதத்தை வைத்து ஓட்டு வாங்க முடியவில்லை. அடுத்த 5 வருடத்தில் வாங்கிக் காட்டுவேன் என்று சாமியார் ஒருவர் வசனம் பேச, அதற்கு அவன் என்ன செய்கிறான் என பார்க்கலாம் என்கிறார் நயன்தாரா.இதனிடையே அம்மனாக வரும் நயன்தாராவின் தலை முடியை கிண்டலடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி இத்திரைப்படத்தில் செய்தியாளராக நடித்திருக்கிறார். அவரது குடும்பத்தில் அம்மனாக என்ட்ரி கொடுத்திருக்கிறார் நயன்தாரா. படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது காட்சிக்கு காட்சி காமெடிக்கு பஞ்சமிருக்காது என்று தெரிகிறது.‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading