முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்'

தீபாவளிக்கு டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்'

நயன்தாராவின் நடிப்பில் வெளியாகவுள்ள ’மூக்குத்தி அம்மன்’

நயன்தாராவின் நடிப்பில் வெளியாகவுள்ள ’மூக்குத்தி அம்மன்’

வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு "மூக்குத்தி அம்மன்" படம் விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளி அன்று விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அம்மன் சமகாலத்தில் உலகிற்கு வந்தால் என்னவாகும் என்ற வித்தியாசமான கோணத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது.

Also read... இயக்குனர் அஜூ இயக்கத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் டிராமா...!

கடந்த மே மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கின் காரணமாக தள்ளி சென்றது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களிடையே வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளி தினத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்றும் 20 கோடி ரூபாய்க்கு இந்த திரைப்படம் வாங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக இயக்குநர், தயாரிப்பாளர் தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. எனவே கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து  உள்ளனர்.

First published:

Tags: Actress Nayantara, Deepavali, Nayanthara, RJ Balaji