இந்திய சினிமாவில் முக்கியமான படம்.... அஜித் நடித்ததற்கு நன்றி - பிரபல இயக்குநர் பாராட்டு!

நேர்கொண்ட பார்வை படத்தைப் பார்த்த விமர்சகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

news18
Updated: August 7, 2019, 12:14 PM IST
இந்திய சினிமாவில் முக்கியமான படம்.... அஜித் நடித்ததற்கு நன்றி - பிரபல இயக்குநர் பாராட்டு!
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்
news18
Updated: August 7, 2019, 12:14 PM IST
பிங்க் படம் இந்திய சினிமாவில் முக்கியமான படம். அதன் ரீமேக்கில் அஜித் நடித்ததற்கு நன்றி என  பிரபல இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியுள்ளார். அமிதாப்பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. அமிதாப்பச்சன் நடித்த வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவன் போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியாகி ஹிட் அடித்திருக்கும் நிலையில் படத்தைப் பார்த்த விமர்சகர்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.


மேலும் பெண் உரிமை குறித்த இன்றைய காலக்கட்டத்துக்கு தேவையான மிக முக்கியமான வாதத்தை ஒரு உச்ச நட்சத்திரத்தின் வாயிலாக உரக்க பேசியதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்தப் படம்.

இந்நிலையில் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் மூடர் கூடம் பட இயக்குநர் நவீன், “பிங்க் படம் இந்திய சினிமாவில் முக்கியமான படம். அந்தப் படத்தின் கதையை மாற்றாமல் வலிமையான கருத்தைப் நேர்கொண்ட பார்வை பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தில் அஜித் நடித்தற்கு நன்றி. இயக்குநர் வினோத் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.படிக்க: நேர்கொண்ட பார்வை படம் எப்படி இருக்கு? - திரை விமர்சனம்

பார்க்க: நேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரச் சிக்கல் தீர்ந்தது எப்படி?

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...