என்ன நீங்க இவ்ளோ அழகா இருக்கீங்க... பிரியா பவானி சங்கரை மேடையில் புகழ்ந்த எஸ்.ஜே.சூர்யா!

என்ன நீங்க இவ்ளோ அழகா இருக்கீங்க... பிரியா பவானி சங்கரை மேடையில் புகழ்ந்த எஸ்.ஜே.சூர்யா!
எஸ்.ஜே .சூர்யா | பிரியா பவானி சங்கர்
  • News18
  • Last Updated: May 8, 2019, 2:55 PM IST
  • Share this:
மான்ஸ்டர் பட விழாவில் பேசிய நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா பிரியா பவானி சங்கரின் அழகை மேடையிலேயே புகழ்ந்துள்ளார்.

ஒரு நாள் கூத்து பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா , ப்ரியா பவானி ஷங்கர் , கருணாகரன், உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மான்ஸ்டர். இவர்களுடன் எலி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்தப் படத்தின் இணை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் முதன் முதலாக படம் முழுவதும் எலியை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாகி உள்ளது. படப்பிடிப்பிற்காக நிஜ எலியை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். எலியின் அசைவுகள் , ரியாக்‌ஷன்களை சுமார் 20 நாட்களுக்கும் மேலாக தனியே படம்பிடித்துள்ளது படக்குழு.


படத்தின் நாயகி ப்ரியா பவானி ஷங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, நானும் எஸ்.ஜே.சூர்யா படத்தைப் பார்த்து வளர்ந்தவள் தானே. அதனால் அவருடன் நடிக்க ஆரம்பத்தில் பயமாக இருந்தது. இயக்குநர் என்னிடம் கதை சொன்ன பிறகு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்” என்றார்.



இதையடுத்து பேசிய நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா,  “பல புலிகளுக்கெல்லாம் வில்லனாக நடித்துவிட்டேன். இந்தப் படத்தில் எலியுடன் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் பணிபுரிந்தது எனக்கு ஆத்ம திருப்தியைக் கொடுத்தது. படத்தின் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளன. பாடல் காட்சிகளில் பிரியா பவானி சங்கரை பார்க்கும் போது குடும்ப குத்து விளக்காக அழகாக இருந்தார். பின்னர் அவருக்கு போன் செய்து சொன்னேன். என்ன நீங்க நேரில் பார்க்கவில்லையா என்று அவர் கேட்டார்.இந்த படத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தமிழ்சினிமா மட்டுமின்றி பாலிவுட்டுக்குச் செல்வார் என நம்புகிறேன்.

பொதுவாகவே செல்லப் பிராணிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும். அதுபோல் குழந்தைகளுக்கு மான்ஸ்டர் படம் மிகவும் பிடிக்கும்

எஸ்.ஜே.சூர்யா நடித்து முதன் முதலாக யூ சான்றிதழ் வாங்கிய படம் இது தான். நான் எடுக்கும் படங்களை வைத்து நான் ஏதோ சகலகலா வல்லவன், கமல்ஹாசன் போல் சந்தோசமா இருப்பவன் என்று எண்ணுகிறார்கள். ஆனால் நிஜத்தில் நான் அப்பாவி என்பது பலருக்கு தெரியாது.

அமிதாப் பச்சனுடன் நடிக்கும் படத்தில் ஒரு நாள் படப்பிடிப்பில் அவர் குங்குமம் வைத்து வெற்றித் திலகம் வைத்தார். அன்று படம் வெளியாகும் தேதியை எனக்கு இயக்குநர் சொன்னார். இனி எஸ்.ஜே.சூர்யா மார்க்கெட் உள்ள ஒரு கதாநாயகனாக மான்ஸ்டர் படத்திற்கு பிறகு வருவேன் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.” என்று கலகலப்பாக பேசினார் எஸ்.ஜே.சூர்யா.

வீடியோ பார்க்க: எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க பயந்தேன் - பிரியா பவானி சங்கர்!

First published: May 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading