RK Suresh: லோன் வாங்கி தருவதாக 1 கோடி மோசடி - நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீது புகார்

ஆர்.கே.சுரேஷ்

ஆர்.கே.சுரேஷ்யை வீணாவும், ராமமூர்த்தியும் அணுகிய போது, அவர் மிரட்டும் தொணியில் பணம் தரமுடியாது, உன்னால் முடிந்ததைப் பார்த்து கொள் என கூறியுள்ளார்.

  • Share this:
    நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக பிரமுகர் ஆர்.கே.சுரேஷ் கடன் வாங்கித் தருவதாக கூறி 1 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக தொழிலதிபரின் மனைவி புகாரளித்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீணா, அவரது கணவர் ராமமூர்த்தி. இவர் எர்த்மூவர்ஸ் என்ற பெயரில் கனரக வாகனங்கள் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்படவே, சென்னையில் உள்ள கமலக்கண்ணன் என்பவர் 10 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக இவர்களிடம் கூறியுள்ளார்.

    இதையடுத்து, திரைப்பட நடிகர் ஆர்.கே. சுரேஷை, கமலக்கண்ணன் வீணா மற்றும் ராமமூர்த்திக்கு அறிமுகம் செய்துள்ளார். ஆர்.கே.சுரேஷ் தனக்கு தெரிந்த வங்கி மேலாளர் மூலமாக கடன் பெற்று வருவதாகவும், இதற்கு கமிஷனாக ஒரு கோடி தரவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதை நம்பி ஆர்.கே.சுரேஷ் வங்கி கணக்கில் 93 லட்சமும், நேரடியாக ரூபாய் 7 லட்சம் என ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார் ராமமூர்த்தி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன் பிறகு இருவரையும் வளசரவாக்கத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ஆர்.கே.சுரேஷ் மற்றும் கமலக்கண்ணன் அழைத்து சென்று, அங்கு வங்கி மேலாளர் முன்னிலையில் பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். அப்போது, நிரப்பப்படாத காசோலைகளிலும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் வீணா மற்றும் ராமமூர்த்தி தம்பதியிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். இதையடுத்து வங்கி வங்கி மேளாளர் சக்திவேல் 10 கோடி ருபாய் கடன் தொகை உங்கள் வங்கி கணக்கில் வரும் என கூறி அவர்களை அனுப்பிவைத்துள்ளார். ஆனால் அவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை.

    இது குறித்து ஆர்.கே.சுரேஷ்யை வீணாவும், ராமமூர்த்தியும் அணுகிய போது, அவர் மிரட்டும் தொணியில் பணம் தரமுடியாது, உன்னால் முடிந்ததைப் பார்த்து கொள் என கூறியுள்ளார். அப்போது தான் தாங்கள் ஏமாந்தது தெரிய வந்திருக்கிறது.

    அதோடு ஆர்.கே.சுரேஷ் அவரது வீட்டை வீணா ராமமூர்த்தி பெயருக்கு விற்பனை செய்ததை போல பத்திரம் பதிவு செய்து, அதை வங்கியில் வைத்து பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்களை ஏமாற்றியதாகவும், இதனால் மன உளைச்சல் எற்பட்டு ராமமூர்த்தி இறந்து விட்டதாகவும் வீணா கூறியுள்ளார்.

    ”எங்களுக்கு தரவேண்டிய ஒரு கோடி ரூபாய் பணத்தை கேட்டு பலமுறை ஆர்.கே.சுரேஷை அணுகினோம். அப்போது எல்லாம், உன்னையும், மகன்களையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதோடு, விழுப்புரத்தில் உள்ள அவரது அடியாட்களை வைத்து மிரட்டவும் செய்தார்” என வீணா கூறியுள்ளார்.

    இந்நிலையில் மனமுடைந்த வீணா, ஆர்.கே. சுரேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: