Home /News /entertainment /

நடிகர் விமலிடம் பண மோசடி: தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு நிபந்தனை ஜாமீன்!!

நடிகர் விமலிடம் பண மோசடி: தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு நிபந்தனை ஜாமீன்!!

நடிகர் விமல்

நடிகர் விமல்

Actor vimal | நடிகர் விமல் இடம் பெறப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்ட ஆவணங்களை மூன்று நாட்களில் ஒப்படைக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடிகர் விமலிடம் பணமோசடி செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

    சினிமா நடிகர் விமல் கடந்த 2020-ம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், ``தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அவர் நண்பர்கள் சிலர், என் பெயரைப் பயன்படுத்தி, போலியான ஆவணங்களைத் தயார் செய்து தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னர் வகையறா பட விற்பனையில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்திருக்கின்றனர்" என்று விமல் குறிப்பிட்டிருந்தார்.

    கடந்த ஆண்டு விமல் நீதிமன்றத்தில் கொடுத்த புகாரில் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்படிருந்த நிலையில் தயாரிப்பாளர் சிங்காரவேலனை கடந்த வாரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

    Also Read : தீபாவளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் வாழ்த்து கூறுவதில்லை? - சட்டப்பேரவையில் காரசார விவாதம்

    நடிகர் விமலுக்கு எதிராக எந்த வகையிலும் செயல்பட மாட்டேன் என்ற அடிப்படையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து, சிங்கார வேலன் அளித்த இந்த மனுவை ஏற்று நடிகர் விமல் சமாதானமாக செல்வதாக மனுத்தாக்கல் செய்ததாலும், சிங்கார வேலன் வாக்குறுதியாக மனுவில் அளித்தவற்றை நிபந்தனைகளாக மாற்றி சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

    நடிகர் விமல் இடம் பெறப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்ட ஆவணங்களை மூன்று நாட்களில் ஒப்படைக்கவேண்டும்.

    நடிகர் விமலுக்கு எதிராக சிங்காரவேலன் மற்றும் அவர்களது நண்பர்கள் கொடுத்த புகார்களை ஏழு நாட்களுக்குள் வாபஸ் பெற வேண்டும். ஆவணங்களை திரும்ப கொடுத்ததற்கும் மற்றும் புகார்களை வாபஸ் பெற்றதற்கும் உரிய ஆவணங்களை, சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    அதுவரை விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சிங்காரவேலன் மற்றும் இருவர் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி பிணைபத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும்.

    நிபந்தனைகளை 7 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் தானாக ஜாமின் ரத்தாகிவிடும் என தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு நிபந்தனை ஜாமின் அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Actor Vimal

    அடுத்த செய்தி