Samantha: தி ஃபேமிலி மேனில் சமந்தா நடிக்க இதுதான் காரணமா?

சமந்தா

போராளிகள் குறித்த சித்திரம் முழுக்கவே தவறு என்பது தொடரை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டு.

  • Share this:
    தி பேமிலி மேன் 2-ல் சமந்தா நடித்ததற்கு பணமே காரணம் என ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

    தி பேமிலி மேன் 2-ல் தமிழர்களும், தமிழ் போராளிகளும் கொச்சைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், உண்மைக்குப் புறம்பான பொய்களை தொடர் நெடுக காட்டுவதாகவும் கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, தமிழ்நாட்டில் வளர்ந்த சமந்தாவுக்கு தமிழர்கள் குறித்து தெரியாமல் போனது எப்படி என்று பலரும் ஆவேசப்பட்டனர்.

    இலங்கை தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளை இயக்குனர் விலாவரியாகக் கூறினார். அதைக்கேட்டு தான் இந்தத் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று சமந்தா தெரிவித்திருந்தார். இதில் அவர் ஏற்று நடித்திருந்த ராஜி கதாபாத்திரம், இலங்கை ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதாகவும், அவரது சகோதரர் போரில் கொல்லப்பட்டதாகவும் காட்டப்பட்டிருந்தது. இது தவிர்த்த போராளிகள் குறித்த சித்திரம் முழுக்கவே தவறு என்பது தொடரை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் சமந்தா வெப் சீரிஸில் நடித்ததற்கு, அவர் சொல்வது போல் இலங்கை தமிழர்கள் அனுபவித்த வேதனை அல்ல காரணம், சினிமாவைப் போல் இரண்டு மடங்கு சம்பளம் கிடைத்ததால் தான் அவர் நடித்தார் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். திரைப்படத்தில் ஒன்று முதல் ஒன்றரை கோடிகள் வரை சம்பளம் பெறும் சமந்தாவுக்கு, இத்தொடருக்காக மூன்று கோடிகள் சம்பளம் தரப்பட்டதாக கூறுகின்றனர்.

    ஆக, திரைப்படத்தை விட அதிக சம்பளம் கிடைத்ததே சமந்தா, வெப் தொடருக்கு வந்ததற்கு காரணமே தவிர அவர் சொல்வது போல் இலங்கைத் தமிழர்கள் மீதான பாசம் எல்லாம் இல்லை என்கிறார்கள் அவரை விமர்சிப்பவர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: