• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Money Heist: மணி ஹெய்ஸ்ட் ட்ரெய்லர் வெளியீட்டால் ரசிகர்கள் குஷி!

Money Heist: மணி ஹெய்ஸ்ட் ட்ரெய்லர் வெளியீட்டால் ரசிகர்கள் குஷி!

மணி ஹெய்ஸ்ட்

மணி ஹெய்ஸ்ட்

மணி ஹெய்ஸ்டின் 5 வது சீஸனின் முதல் வேல்யூம் செப்டம்பர் 3 நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

  • Share this:
    உலக அளவில் அதிகம் பேர் பார்த்த வெப் தொடர்களில் மணி ஹெய்ஸ்ட் முக்கியமானது. புரபஸர் என்பவர் தலைமையில் ஒரு அணி பணத்தை திருடுவது தான் கதை.

    கேட்க சாதாரணமாக தோன்றும். ஆனால், அவர்கள் பணத்தை திருடுவது சாதாரண வங்கியில் அல்ல. ராயல் மின்ட் ஆஃப் ஸ்பெயின். பணத்தை அச்சிடும் இடம். உலகின் அதிநவீன பாதுகாப்பு பொருந்திய கட்டடங்களில் ஒன்று. இரண்டாவதாக திருடுவது தங்கம். அதுவும் மிகுந்த பாதுகாப்புள்ள வங்கியிலிருந்து.

    மணி ஹெய்ஸ்டில் இதுவரை நான்கு சீஸன்கள் வந்துள்ளன. நான்காவது சீஸனில் முக்கிய கதாபாத்திரமான நைரோபியின் மரணம் ரசிகர்கள் பெரும்பாலானவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. புரொஃபஸரின் இருப்பிடத்தை இன்ஸ்பெக்டர் அலிசியா சீர்ரா கண்டுபிடித்து, அவரை துப்பாக்கி முனையில் நிறுத்துவதோடு நான்காவது பாகம் முற்றுப் பெற்றது. புரபஸர் என்னவானார்? தங்கம் திருடுகிற டீம் என்னவானது என்பது குறித்து அறிய ஆவலாக இருந்தவர்களுக்கு விடையளிக்கும் வகையில் நேற்று ஐந்தாவது சீஸனின் ட்ரெய்லர் வெளியானது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால், இன்ஸ்பெக்டர் புரபஸரை டார்ச்சர் செய்யும் காட்சி ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்ததே தவிர, அவர் தப்பித்தாரா என்பது இல்லை. அதேபோல், ராணுவம் புரபஸரின் டீமின் மீது தாக்குதல் நடத்துவது, லிஸ்பென் அவர்களுக்கு தலைமைத் தாங்கி எதிர்த்து போராடுவது என காட்சிகள் உள்ளன. ஆனால், அங்கிருந்து பத்திரமாக தப்பித்தார்களா என்பதற்கு பதிலில்லை. கதையின் எந்த திசையையும் யூகிக்க முடியாதபடி ட்ரெய்லரை உருவாக்கியிருக்கிறார்கள்.

    மணி ஹெய்ஸ்டின் 5 வது சீஸனின் முதல் வேல்யூம் செப்டம்பர் 3 நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. மணி ஹெய்ஸ் ரசிகர்கள் செப்டம்பர் 3 க்கு இப்போதே வெயிட்டிங்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: