Money Heist Season 5 Volume 1 எப்படி இருக்கிறது?

மனி ஹெய்ஸ்ட்

மனி ஹெய்ஸ்ட்

சிறப்பு பேச்சாளர் வருவதற்கு முன் சுமார் பேச்சாளர்களை வைத்து நிகழ்ச்சியை ஒப்பேற்றுவது போல் இருக்கிறது இந்த ஐந்தாம் சீஸனின் முதல் வால்யூம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மணி ஹெய்ஸ்ட் வெப் தொடருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு ஆச்சரியமளிக்கிறது. த்ரோன் ஆஃப் பிளட் தொடருக்கு இதேபோல் இருந்தது. ஆனால், அந்தத் தொடர் ஓடிடி தளத்தில் வெளியான போது, இந்தியாவில் ஓடிடி அத்தனை பிரபலமாகியிருக்கவில்லை. அந்தவகையில் இந்தியாவில் அதிகம் வரவேற்பு பெற்ற முதல் தொடர் இந்த ஸ்பானிஷ் வெப் தொடர் எனலாம்.

நீண்டகால காத்திருப்புக்கு பின் மணி ஹெய்ஸ்ட் சீஸன் 5 வால்யூம் 1 வெளியாகியுள்ளது. மொத்தம் ஐந்து எபிசோடுகள். எதிர்பார்ப்பை இழுக்க வேண்டும் என்று இரு வால்யூமாக வெளியிட்டிருக்கிறார்கள். நான்காவது சீஸனிலேயே கொஞ்சம் உருட்டுகிறார்களோ என தோன்றியது. நைரேபியின் மரணம், லிஸ்பெனை போலீசிடமிருந்து காப்பாற்றுவது என சில சுவாரஸியமான அம்சங்கள் நான்காவதை காப்பாற்றின. பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார் என்பது மாதிரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் அலிசியா சீயராவிடம் மாட்டிய புரபஸர் நிலை என்னவாகும் என்ற எதிர்பார்ப்புடன் நான்காவது சீஸனை முடித்திருந்தனர். அந்த டெம்போவுடன் சீஸன் 5 தொடங்குகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.மணி ஹெய்ஸ்ட் மொத்த சீஸனையும் பார்க்கிற ஒருவருக்கு ஒரு விஷயம் புரியும். புரபஸரும், அவரது டீமும் வெளியே நிற்கும் நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்களுடன் அதிகம் சண்டையிடுவதில்லை. அதிக சேதாரம் ஏற்படுவதும் இல்லை. மாறாக, அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பவர்களுடன்தான் அதிகம் சண்டையிட்டிருக்கிறார்கள். அடுத்து தங்களுக்குள். ஐந்தாவது சீஸனிலும் இது தொடர்கிறது.பிணைக்கைதிகளில் நமக்கு எரிச்சலை தருகிற கதாபாத்திரம் ஆர்டுரோ. பேசியே அடுத்தவர்களை குற்றவுணர்வுக்குள் தள்ளி ஏடாகூடமாக எதையாவது செய்ய வைக்கிற கதாபாத்திரம். இதிலும் அதிக டேமேஜை ஆர்டிரோவே ஏற்படுத்துகிறார். அவர்களுக்கே அது போரடித்திருக்கும். அதனால், ஒரு ஸ்பெஷல் போர்ஸும் வெளியிலிருந்து வந்து சண்டையிடுகிறது.வங்கிக்குள் போர் நடந்து கொண்டிருக்கையில், வெளியே புரபஸரை அலிசியா, அவர்களின் திட்டம் என்ன என்று கேட்டு டார்ச்சர் செய்கிறாள். அவளிடமிருந்து எப்படியும் புரபஸர் தப்பிப்பார் என்பது தெரியும். ஆனால், எப்படி? அதற்கு லாஜிக்காக ஒரு விஷயத்தை காட்டியிருக்கிறார்கள். அலிசியா தனியாக விசாரணை மேற்கொண்டது அவருக்கே பேக் ஃபயராவதும் எதிர்பாராத திருப்பம்

Also read... ரசிகர்களை மகிழ்விக்க வரும் செப்டம்பர் மாத ஓடிடி வெளியீடுகள்!இந்த மெயின் கதையுடன் பிளாஷ்பேக்கில் பெர்லின் தனது மகனுடன் செய்யும் திருட்டும், டோக்கியோவின் முன்னாள் காதலன் ரெனேயின் கதையும் அவ்வப்போது இடையீடாக வருகின்றன. டோக்கியோவின் கதி என்னாகும் என்பதை இந்த பிளாஷ்பேக் காட்சி கொஞ்சம் அப்பட்டமாகவே நமக்கு உணர்த்துகிறது. பெர்லினின் கதை வெறும் பிளாஷ்பேக்கா, இல்லை அதன் தொடர்ச்சி, மெயின் கதையில் இணையுமா என்பதை சொல்லாமலே முடித்திருக்கிறார்கள்.சிறப்பு பேச்சாளர் வருவதற்கு முன் சுமார் பேச்சாளர்களை வைத்து நிகழ்ச்சியை ஒப்பேற்றுவது போல் இருக்கிறது இந்த ஐந்தாம் சீஸனின் முதல் வால்யூம். காய்ந்த ரெட்டியைத் தாண்டித்தானே உள்ளேயிருக்கும் வெண்ணையை அடைய முடியும்அடுத்த வேல்யூமில் அந்த வெண்ணைய் ரசிகர்களுக்கு கிடைக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: