Home /News /entertainment /

சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் - அரசை நெருக்கும் நடிகைகள்!

சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் - அரசை நெருக்கும் நடிகைகள்!

மலையாள முன்னணி நடிகைகள்

மலையாள முன்னணி நடிகைகள்

மலையாள முன்னணி நடிகைகள் முன்னெடுத்து இருக்கும் இந்த முயற்சி கேரள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் உடனே விசாக கமிட்டியை அமைக்க வேண்டிய கட்டாயத்தையும் உருவாக்கியுள்ளது.

  • News18
  • Last Updated :
கடந்த 2017 மலையாள நடிகை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட நிகழ்ச்சி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தில் தொடர்புடையதாக முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தின் மீது உடனடியாக மலையாள நடிகர் சங்கமான அம்மா நடவடிக்கை எடுக்கவில்லை என மலையாள திரையுலகை சேர்ந்த பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். ரீமா கல்லிங்கல், பார்வதி, ரம்யா நம்பீசன் போன்ற முன்னணி நடிகைகள் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தினர். அதனைத் தொடர்ந்து திலீப் நடிகர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

சினிமாவில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விமன் இன் சினிமா கலெக்டிவ் என்ற பெயரில் ஒரு அமைப்பை முன்னணி நடிகைகளும், சினிமாவின் பிற துறைகளில் பணிபுரியும் பெண்களும் இணைந்து உருவாக்கினர். சுப்ரீம் கோர்ட் வகுத்துக் கொடுத்த விசாகா கமிட்டி வரைமுறைகளின்படி மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலும், மலையாள திரைத்துறையிலும் கமிட்டி அமைக்க வேண்டும் என கோரி இருந்தார்கள்.

ஆனால் இன்று வரை அப்படி ஒரு கமிட்டியை கேரள அரசு அமைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்வதி, ரீமா கல்லிங்கல் போன்ற நடிகைகள் விசாக கமிட்டி அமைப்பை அமைக்காமல் தாமதப்படுத்தும் அரசை எதிர்த்து கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். ஆனாலும் அரசு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப கேரள மாநில பெண்கள் கமிஷன், கேரள சலசித்ர அகாடமி போன்றவை தாக்கல் செய்த அப்பீலில் விசாரணை அமைப்பை தாமதம் செய்யாமல் உடனே அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு இந்த மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Also read... 'ராட்சசனைவிட நடிப்பில் மிரட்டிட்டீங்க' - விஷ்ணு விஷாலை பாராட்டிய தனுஷ்!
மலையாள முன்னணி நடிகைகள் முன்னெடுத்து இருக்கும் இந்த முயற்சி கேரள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் உடனே விசாக கமிட்டியை அமைக்க வேண்டிய கட்டாயத்தையும் உருவாக்கியுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Chief Minister Pinarayi Vijayan, Mollywood

அடுத்த செய்தி