ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கல்ஃப் நாடுகளில் மோகன்லாலின் ’மான்ஸ்டர்‘ படத்திற்கு தடை - இதுதான் காரணம்!

கல்ஃப் நாடுகளில் மோகன்லாலின் ’மான்ஸ்டர்‘ படத்திற்கு தடை - இதுதான் காரணம்!

மோகன்லால்

மோகன்லால்

வைசாக்  இயக்கியுள்ள இந்தப் படத்தில் லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்பட மேலும் பலரும் நடித்துள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து காட்சிகள் இடம்பெற்றியிருப்பதால் 'கல்ஃப்' நாடுகள் எனப்படும் வளைகுடா நாடுகளில் மோகன்லாலின் 'மான்ஸ்டர்' படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மோலிவுட் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மான்ஸ்டர் என்ற புதிய மலையாள படத்தில் நடித்து இருக்கிறார். வைசாக்  இயக்கியுள்ள இந்தப் படத்தில் லட்சுமி மஞ்சு, ஹனிரோஸ், சித்திக் உள்பட மேலும் பலரும் நடித்துள்ளனர். வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் மான்ஸ்டர் மான்ஸ்டர் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

உதய்கிருஷ்ணா எழுத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளது. தீபக் தேவ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் மான்ஸ்டர் படத்தை 'கல்ப்' நாடுகள் எனப்படும் வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. மான்ஸ்டர் படத்தை அந்த நாடுகளின் தணிக்கை குழுவுக்கு படக்குழுவினர் அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், படத்தில் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் படத்தை வெளியிட அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Also read... என் கனவினில் வந்த காதலியே... ஹன்சிகாவின் ஆல் கியூட் ஆல்பம்!

இது படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கும் என்பதால், சர்ச்சை காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் வளைகுடா நாடுகளின் தணிக்கை குழுவுக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும் உடனடியாக இந்த பணிகளை முடிப்பது சிரமம் என்பதால் மான்ஸ்டர் இந்தியாவில் வெளியாகும் அதேநாளில் வளைகுடா நாடுகளில் வெளியாகாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கும் என்றும் திரைத்துறையினர் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Mohanlal