• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அரசின்‌‌ ‌‌தலையீட்டால்‌‌ ‌‌திரையரங்கில்‌‌ ‌‌வெளியாகும்‌‌ ‌‌மோகன்லாலின்‌ ‌மரைக்கார்‌!

அரசின்‌‌ ‌‌தலையீட்டால்‌‌ ‌‌திரையரங்கில்‌‌ ‌‌வெளியாகும்‌‌ ‌‌மோகன்லாலின்‌ ‌மரைக்கார்‌!

 மோகன்லால்

மோகன்லால்

மரைக்காரின் திரையரங்கு வெளியீடு ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மோகன்லால் நடித்திருக்கும் மரைக்கார் - அரபின் கடலின்டெ சிம்ஹம் திரைப்படம் கேரள இடதுசாரி அரசின் தலையீட்டால் ஓடிடிக்குப் பதில் திரையரங்கில் வெளியாகிறது.

மரைக்கார் - அரபிக் கடலின்டெ சிம்ஹம் திரைப்படம் கோழிக்கோடைச் சேர்ந்த முஸ்லீம் மரைக்கார் வெள்ளையர்களுக்கு எதிராக நடத்திய கடற்போரை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இவர்தான் வெள்ளையனுக்கு எதிராக முதலில் கடற்படை அமைத்தவர் என்கிறார்கள் மலையாளிகள். பெரும் பொருட்செலவில் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் சீன நடிகர்களின் உழைப்பில் இப்படத்தை ப்ரியதர்ஷன் எடுத்துள்ளார். ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பு.

இந்தப் படத்தின் வெளியீடு கொரோனா இரண்டாம் அலையால் தள்ளிப்போனது. படத்தை ஓடிடியில் வெளியிட முன்னணி ஓடிடி நிறுவனங்கள் முயன்றன. மோகன்லால், ப்ரியதர்ஷன், ஆண்டனி பெரும்பாவூர் மூவரும் படத்தை திரையரங்கில் வெளியிடுவதில் உறுதியாக இருந்தனர். இறுதியில் ஆகஸ்ட் 12 ஓணத்தை முன்னிட்டு வெளியிட முடிவானது. முதல் 25 தினங்கள் மரைக்கார் படத்தை மட்டும் திரையரங்கில் தனியாக வெளியிடுவது என்று முடிவானது. நான்கு வாங்களுக்குப் பிறகே படத்தை ஓடிடியில் வெளியிடுவது என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது

கேரளாவில் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வராததால் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகள் திறக்கவில்லை. பட வெளியீடு தள்ளிப்போனது. அப்போதும் படத்தை திரையரங்கில் வெளியிடுவது என்பதில் உறுதியாக இருந்தனர். அக்டோபர் 25 முதல் கேரளாவில் ஐம்பது சதவீத பார்வையாளர்களுடன் படத்தை வெளியிட அரசு அனுமதித்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வரவில்லை. இதனால் மரைக்கார் படத்துக்கு முன்பு பேசியதைவிட குறைவான பணமே தர முடியும் என திரையரங்கு உரிமையாளர்கள் கூற, படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தந்தார்.

இந்நிலையில், அரசு இந்தப் பிரச்சனையில் தலையிட்டது. அமைச்சர் ஷாஜி செரியன் மரைக்கார் திரையரங்கில் மட்டுமே வெளியாகும். திரைப்படங்கள் முதலில் திரையரங்கில் வெளியாக வேண்டும். பிறகுதான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதே அரசின் கொள்கை. அடுத்த வருடம் அரசே ஓடிடி தளம் ஒன்றை தொடங்கும் என்றார்.

அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனைத் தொடர்ந்து அமேசான் பிரைம் வீடியோவில் படத்தை நேரடியாக வெளியிட ஆண்டனி பெரும்பாவூர் ஒப்பந்தம் செய்து கொண்டார். இது மலையாள சினிமா வர்த்தகத்தில் புயலை கிளப்பியது. மோகன்லாலின் அடுத்த நான்குப் படங்களும் ஓடிடியில் வெளியாகும் என செய்தி வெளியானது. அரசு மீண்டும் பேச்சுவார்த்தையில் இறங்கியது. இறுதியில் நேற்று அமைச்சர் ஷாஜி செரியன், மரைக்கார் படம் டிசம்பர் 2 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவித்தார். சினிமா சரித்திரத்தில் ஒரு அமைச்சர் பட வெளியீட்டை அறிவித்தது இதுவே முதல்முறையாக இருக்கும்

Also read... ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜெய் பீம்!

டிசம்பர் 2 படம் திரையரங்கில் வெளியாவதை உறுதி செய்து மோகன்லாலும் ட்வீட் செய்துள்ளார். மரைக்காரின் திரையரங்கு வெளியீடு ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: