Mohanlal: பிரியதர்ஷன் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் மோகன்லால்

Mohanlal: பிரியதர்ஷன் படத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் மோகன்லால்

மோகன்லால்

இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பாக்ஸராக நடிக்க உள்ளார் மோகன்லால். இதற்காக கடும் உடற்பயிற்சி செய்து வருகிறார். அந்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

  • Share this:
    இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பாக்ஸராக நடிக்க உள்ளார் மோகன்லால். இதற்காக கடும் உடற்பயிற்சி செய்து வருகிறார். அந்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    மோகன்லால் அறிமுகமான ’மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்’ படத்தில் தான் ப்ரியதர்ஷன் முதல்முறையாக உதவி இயக்குநராக பணியாற்றினார். அப்போதிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள். மோகன்லாலை வைத்து 25 படங்களுக்கு மேல் அவர் இயக்கியுள்ளார். வரும் மே 13-ம் தேதி பிரமாண்ட பொருட்செலவில் தயாரான மராக்கர் - அரபிக்கடலின்டெ சிம்ஹம் திரைப்படம் வெளியாகிறது. ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள படம் இது.

    தற்போது தனது முதல் படத்தை கேரளாவில் இயக்கி வருகிறார் மோகன்லால். ஆம், மோகன்லால் படம் இயக்குகிறார். அதையடுத்து மீண்டும் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கிறார். இது பாக்ஸிங் பின்னணியில் தயாராகும் படம் என்கின்றன தகவல்கள். மோகன்லால் இதில் பாக்ஸராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
    உடல் விஷயத்தில் கவனமெடுக்காதவர்கள் மலையாள நடிகர்கள். அதாவது இப்போது இருக்கும் சீனியர் நடிகர்களில் மம்முட்டி நீங்கலாக மோகன்லால், சுரேஷ்கோபி என அனைவருக்கும் செல்ல தொப்பை உண்டு. ஒடியன் படத்துக்காக உடல் இளைத்தாலும் உடனே மீண்டும் பழைய பிரமாண்டத்துக்கு திரும்பினார் மோகன்லால். மறுபடியும் உடற்பயிற்சியை அவர் ஆரம்பித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தில் அவர் உடல் இளைத்துப் போய் இருந்ததை கவனிக்கலாம்.

    பாக்ஸராக நடிப்பதால் கணிசமான நேரத்தை அவர் ஜிம்மில் செலவிடுகிறார். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: