Home /News /entertainment /

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் மோகன்லாலின் புதிய படம்!

டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகும் மோகன்லாலின் புதிய படம்!

மோகன்லால்

மோகன்லால்

லூசிபரில் நடித்தது போல் ப்ரோ டாடியிலும் பிருத்விராஜ் நடித்துள்ளார். இதில் அவர் மோகன்லாலின் தம்பியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

மோகன்லால் நடித்திருக்கும் புதிய படம் ப்ரோ டாடி விரைவில் டிஸ்னி + ஹாட்  ஸ்டாரில் நேரடியாக வெளியாகிறது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாவது புதிதல்ல. இந்திய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அவரது த்ரிஷ்யம் 2 படம் சென்ற வருட ஆரம்பத்தில் நேரடியாக ஓடிடியில்தான் வெளியானது. இந்த வருட ஆரம்பத்தில் ப்ரோ டாடி நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.
ப்ரோ டாடி படத்தை நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார்.

இயக்குனராக தனது முதல் படம் லூசிபரில் மோகன்லாலை நடிக்க வைத்த  பிருத்விராஜ், தற்போது இரண்டாவது படத்தையும் அவரை வைத்தே இயக்கியுள்ளார். லூசிபரில் நடித்தது போல் ப்ரோ டாடியிலும் பிருத்விராஜ் நடித்துள்ளார். இதில் அவர் மோகன்லாலின் தம்பியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுடன் மீனா, கல்யாணி ப்ரியதர்ஷன், லாலு அலெக்ஸ், கனிகா, ஜெகதீஷ், சௌபின் சஹிர், பிருத்விராஜின் அம்மா மல்லிகா சுகுமாரன், உண்ணி முகுந்தன், முரளி கோபி, நிகிலா விமல், ஜாஃபர் இடுக்கி, தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் என ஏராளமானோர் நடித்துள்ளனர்.

ப்ரோ டாடி படத்தை ஆண்டனி பெரும்பாவூரின் ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது. இது மோகன்லாலின் சொந்தக் கம்பெனி போல. அவர் நடிக்கும் படங்களையே பெரும்பாலும் தயாரிக்கும். சமீபத்தில் வெளியான மரைக்காயர் திரைப்படத்தையும் இவர்களே தயாரித்திருந்தனர்.

இதையும் படிங்க - பாவாடை தாவணியில் பட்டையைக் கிளப்பிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் - வைரலாகும் டான்ஸ் வீடியோ!

காமெடி குடும்பச் சித்திரமான ப்ரோ டாடி படத்தை டிஸ்னி + ஹாட்  ஸ்டார் வெளியிடுகிறது. இந்த மாதம் 26-ஆம் தேதி படம் வெளியாகும் என எதிபர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள டுவெல்த் மேன் திரைப்படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Mohanlal

அடுத்த செய்தி