ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

த்ரிஷ்யம் 3 ஆம் பாகத்தின் க்ளைமேக்ஸ் ரெடி… அப்டேட் வெளியிட்ட இயக்குனர் ஜீத்து ஜோசப்

த்ரிஷ்யம் 3 ஆம் பாகத்தின் க்ளைமேக்ஸ் ரெடி… அப்டேட் வெளியிட்ட இயக்குனர் ஜீத்து ஜோசப்

த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லால் மற்றும் படக்குழுவினர்.

த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லால் மற்றும் படக்குழுவினர்.

த்ரிஷ்யம் படத்தின் இந்தி ரீமேக் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. அஜய் தேவ்கன், ஸ்ரேயா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

த்ரிஷ்யம் படத்தின் 3 ஆம் பாகத்துடைய க்ளைமேக்ஸ் ரெடியாக இருப்பதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியுள்ளார்.

மலையாளத்தில் மோகன் லால், மீனா, எஸ்தர் அனில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரிஷ்யம் முதல் பாகம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்கியதன் மூலம் மலையாள சினிமாவை இந்தியாவையே திரும்பி பார்க்கும்படி செய்தார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.

திரிஷ்யம் ஹிட்டானதை தொடர்ந்து தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இந்தப் படத்தை பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தனர். இதில் கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழிலும் இந்தப் படம் ஹிட்டானது.

ரஷ்யாவில் ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம்… ட்ரெய்லர் இன்று வெளியானது…

இதைத் தொடர்ந்து த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஓடிடியில் வெளியானது. அந்த சூழலில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தால் வேறு வழியின்றி த்ரிஷ்யம் 2 திரைப்படம் ஒடிடியில் களம் இறக்கப்பட்டது.

' isDesktop="true" id="847295" youtubeid="0f-nd1uGsjQ" category="cinema">

முதல் பாகத்தை பின்னுக்கு தள்ளும் வகையில் இரண்டாம் பாகம் அமைந்திருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர். தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் பாகத்தில் நடித்த அஜய் தேவ்கன், ஸ்ரேயா, தபு, அக்சய் கன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தை பின்னுக்கு தள்ளும் வகையில் இரண்டாம் பாகம் அமைந்திருந்ததால் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர். இதன் தொடர்ச்சியாக 3ஆம் பாகமும் திரைக்கு வரும் என்று இயக்குனர் ஜீத்து ஜோசப் அறிவித்துள்ளார்.

ஓடிடியில் வெளியான பின்னரும் வசூலை அள்ளிக் குவிக்கும் பொன்னியின் செல்வன்…

இந்த நிலையில் த்ரிஷ்யம் படத்தின் 3 ஆம் பாகம் விரைவில் உருவாகும் என்ற அப்டேட்டை இயக்குனர் ஜீத்து ஜோசப் வெளியிட்டுள்ளார். குறிப்பாக 3ஆம் பாகத்தின் க்ளைமேக்ஸ் தயாராகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது மகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த போலீஸ் அதிகாரியின் மகனை மோகன் லால் அடித்துக் கொன்று, புதைத்திருப்பார். இந்த காட்சிகள் முதல் மற்றும் 2ஆம் பாகத்தில் இடம்பெறவில்லை. இது 3ஆம் பாகத்தில் இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Kollywood