Home /News /entertainment /

3 தேசிய விருதுகள் படமா இது? ஏமாற்றமளித்த மோகன்லாலின் மரைக்காயர்

3 தேசிய விருதுகள் படமா இது? ஏமாற்றமளித்த மோகன்லாலின் மரைக்காயர்

மோகன்லால்

மோகன்லால்

மோகன்லாலின் மரைக்காயர் - அரபிக் கடலின்டெ சிம்ஹம் படம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கோழிக்கோட்டில் வாழ்ந்த குஞ்ஞாலி மரைக்காயர் வெள்ளையர்களுக்கு எதிராக கடற்படை திரட்டி போராடினார் என்பது வரலாறு. அதனை ப்ரியதர்ஷன் மோகன்லால் நடிப்பில் மரைக்காயர் - அரபிக் கடலின்டெ சிம்ஹம் என்ற பெயரில் படமாக்கினார். இந்தப் படம் வெளிவரும் முன்பே சிறந்த திரைப்படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சிறந்த காஸ்ட்யூம் என மூன்று பிரிவுகளில் தேசிய விருது பெற்றது. அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் ரசிகர்களை ஒட்டு மொத்தமாக ஏமாற்றியுள்ளது. பலவீனமான திரைக்கதையும், ஒழுங்காக எழுதப்படாத கதாபாத்திரங்களும், சாதாரணமாக வந்து போகும் ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 10 சதவீதத்தைக்கூட பூர்த்தி செய்யவில்லை.

அதிக ரசிகர் மன்ற காட்சிகள், அதிக திரையரங்குகள், அதிக ஒருநாள் காட்சிகள், முன்பதிவில் 100 கோடி வசூல் என்ற அத்தனை சாதனைப் பேச்சுகளையும் படம் முதல்நாளே காலி செய்துவிட்டது. விமர்சகர்கள் கடுமையாக படத்தின் குறைகளை விமர்சித்துள்ள நிலையில், இரண்டாவது நாளுக்கே கூட்டமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க - சிபிக்கும் அபிஷேக்கிற்கும் இடையே வெடித்த சண்டை

ப்ரியதர்ஷன், மோகன்லால் கூட்டணி 25-க்கும் மேற்பட்ட படங்களை உருவாக்கியிருக்கிறது. அதில் மிகப்பெரிய ஏமாற்றமாக மரைக்காயர் அமைந்துள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Mohanlal

அடுத்த செய்தி