முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / லூசிஃபர் ரீமேக் ‘காட் ஃபாதர்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

லூசிஃபர் ரீமேக் ‘காட் ஃபாதர்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிரஞ்சீவி - மோகன்லால்

சிரஞ்சீவி - மோகன்லால்

Lucifer Remake God father : சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஆச்சாரியா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதனால் காட்பாதர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்புடன் சிரஞ்சீவியின் ரசிகர்கள் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மலையாளத்தில் மெகா ஹிட்டான லூசிபரின், தெலுங்கு ரீமேக்கான ‘காட்பாதர்’ படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்பாதர் படத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம் சிரஞ்சீவி நடித்து வருகிறார். மோகன்லால் நடிப்பில் பிரித்திராஜ் இயக்கத்தில் உருவான லூசிஃபர் திரைப்படம், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

மோகன்லால் நடித்த படங்களிலேயே இந்த திரைப்படம் மிகப்பெரும் வசூலை குவித்தது. 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான லூசிபர், 175 கோடிக்கும் அதிகமான கலெக்ஷனை அள்ளியது.

இந்தப் படத்தில் மோகன்லாலுடன், விவேக் ஓபராய், சுரேஷ் மேனன் மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ், பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள்.

Thiruchitrambalam Movie Review: தனுஷின் திருசிற்றம்பலம் படம் விமர்சனம்!

அரசியல் ஆக்சன் திரில்லர் ஜானரில் லூசிபர் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கும். சுமார் 3 மணி நேரம் ஓடக்கூடிய இந்த திரைப்படம் அதிக விறுவிறுப்புடன் ரசிகர்களை மகிழ்வித்தது. இந்த படத்தை, மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கு முன்னணி கதாநாயகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

ஏனென்றால் படத்தின் ஹீரோ கதாபாத்திரம் படு மாஸ்ஸாக அமைக்கப்பட்டிருக்கும். லூசிபர் திரைப்படம் தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு ள்ளது. இதில் தெலுங்கு உச்சநட்சத்திரம் சிரஞ்சீவி மோகன்லால் கேரக்டரில் நடிக்கிறார்.

நடிகர்,ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சிரஞ்சீவியுடன் நயன்தாரா, சத்யதேவ், சுனில், புரி ஜெகன்னாத் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சல்மான் கான் நடிக்கிறார்.

எப்படி இருக்கிறது தனுஷின் திருசிற்றம்பலம் படம்? ட்விட்டர் விமர்சனம்!

மிகப் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை ராம்சரண், ஆர்பி சவுத்ரி, எம்.வி பிரசாத் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். தமன் இசையமைக்க ஒளிப்பதிவை நீரவ்ஷா கவனிக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் வரும் 21ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  காட் ஃபாதர் படத்தை அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஆச்சாரியா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதனால் காட்பாதர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்புடன் சிரஞ்சீவியின் ரசிகர்கள் உள்ளனர்.

First published:

Tags: Mohanlal, Tollywood