• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தொடங்கியது த்ரிஷ்யம் கூட்டணியின் புதிய படம்...!

தொடங்கியது த்ரிஷ்யம் கூட்டணியின் புதிய படம்...!

மோகன்லால்

மோகன்லால்

ஒரே லொகேஷனில் நடக்கும் கதையிது. மோகன்லாலுடன் உண்ணி முகுந்தன், சைஜு குரூப், ராகுல் மாதவன், அனு சித்தாரா, லியோனா, ஷைன் டாம் சாக்கோ, அனுஸ்ரீ, ப்ரியங்கா நாயர் உள்பட மேலும் சிலர் நடிக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
த்ரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அதன் நாயகன் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. 

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் சென்சேஷனல் ஹிட்டாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் இந்த வருட ஆரம்பத்தில் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் நேரடியாக வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து ராம், டுவெல்த் மேன் என இரு படங்களை ஜீத்து ஜோசப் மோகன்லாலை வைத்து இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. முதலில் அறிவித்தது ராம். ஆனால், அதனை தள்ளி வைத்து டுவெல்த்மேனை அறிவித்தனர். அரங்கு அமைக்கும் பணிகளும் தொடங்கின. அந்த நேரம் பிருத்விராஜின் ப்ரோ டாடி படத்தில் நடிக்கச் சென்றார் மோகன்லால். அதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்து மோகன்லால் ஜீத்து ஜோசப்பின் டுவெல்த்மேனில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷாஜி கைலாஷின் இயக்கத்தில் புதிய படத்தை மோகன்லால் அறிவித்தார். மோகன்லாலுக்கும், ஜீத்து ஜோசப்புக்கும் இடையில் கருத்து வேறுபாடு, அதனால்தான் அவரது படங்களை மோகன்லால் தவிர்க்கிறார் என்றுகூட பேச்சுகள் எழுந்தன. அதனை பொய்யாக்கும்விதமாக டுவெல்த்மேன் படப்பிடிப்பில் மோகன்லால் நேற்று கலந்து கொண்டார்

Also read... தெலுங்கில் அல்லு அர்ஜுனை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்...?

டுவெல்த்மேன் படத்தில் 15 கதாபாத்திரங்கள் இடம்பெறுகின்றன. ஒரே லொகேஷனில் நடக்கும் கதையிது. மோகன்லாலுடன் உண்ணி முகுந்தன், சைஜு குரூப், ராகுல் மாதவன், அனு சித்தாரா, லியோனா, ஷைன் டாம் சாக்கோ, அனுஸ்ரீ, ப்ரியங்கா நாயர் உள்பட மேலும் சிலர் நடிக்கின்றனர். கே.ஆர்.கிருஷ்ணகுமார் இதன் திரைக்கதையை எழுதியுள்ளார். டுவெல்த்மேனை முடித்த பிறகு ஷாஜி கைலாஷின் படத்தில் மோகன்லால் நடிப்பார் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: