• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மோகன்லால், ஜீத்து ஜோசப்பின் டுவெல்த் மேன் - முக்கிய அப்டேட்!

மோகன்லால், ஜீத்து ஜோசப்பின் டுவெல்த் மேன் - முக்கிய அப்டேட்!

மோகன்லால் - ஜீத்து ஜோசப்

மோகன்லால் - ஜீத்து ஜோசப்

ப்ரோ டாடி முடிந்ததும் மோகன்லால் டுவெல்த் மேன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

  • Share this:
    மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கி வந்த டுவெல்த் மேன் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

    மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியின் த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 படங்கள் இந்தியா தாண்டியும் பெயர் வாங்கித் தந்தது. த்ரிஷ்யம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியாவின் பிற மொழிகளிலும் ரீமேக்கானது. இவர்கள் ராம் என்ற படத்தில் மீண்டும் இணைவதாக அறிவித்திருந்தனர். த்ரிஷா நாயகி.

    இந்நிலையில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் டுவெல்த் மேன் என்ற படத்தில் மோகன்லால் நடிக்கிறார் என திடீரென அறிவித்தனர். படத்துக்கான அரங்கு அமைக்கும் பணியும் தொடங்கியது. ஆனால், மோகன்லால் அந்தப் படத்திலும் நடிக்காமல் பிருத்விராஜின் ப்ரோ டாடி படத்துக்கு கால்ஷீட் தந்தார். ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அதன் படப்பிடிப்பு நடந்தது.

    ப்ரோ டாடி முடிந்ததும் மோகன்லால் டுவெல்த் மேன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சில வாரங்கள் முன்பே மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக அறிவித்துள்ளனர். இந்தப் படம் த்ரிஷ்யம் 2 போல் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

    Mohanlal, Jeethu Joseph's 12th Man - Important Update, mohanlal, mohanlal upcoming movies, mohanlal movies, மோகன்லால், மோகன்லால் ரசிகர்கள், jeethu joseph, jeethu joseph movies, jeethu joseph mohanlal, jeethu joseph mohanlal new movie, jeethu joseph trisha, jeethu joseph upcoming movies, jeethu joseph thriller movies, mohanlal trisha, மோகன்லால் திரைப்படங்கள், ஜீத்து ஜோசப் திரைப்படங்கள், ஜீத்து ஜோசப் மோகன்லால், ஜீத்து ஜோசப் மோகன்லால் புதிய திரைப்படம், ஜீத்து ஜோசப் திரிஷா
    மோகன்லால் படம்


    மோகன்லால் நடிப்பில் மரக்கார் - அரபிக்கடலின்டெ சிம்ஹம், ஆறாட்டு ஆகிய படங்கள் தயாராக உள்ளன. இவ்விரு படங்களும் திரையரங்குகள் திறப்பதற்காக காத்திருக்கின்றன. இவை தவிர ப்ரோ டாடி, டுவெல்த்மேன் படங்கள் போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் உள்ளன. இதில் ப்ரோ டாடி டிஸ்னி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. டுவெல்த் மேனும் ஓடிடி வெளியீடாக வரவுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: