வீட்டில் யானைத் தந்தம் வைத்திருந்த விவகாரம் - மோகன்லால் உள்ளிட்ட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை!

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மீறப்பட்டிருபதாகவும், வனத்துறையினரே அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

வீட்டில் யானைத் தந்தம் வைத்திருந்த விவகாரம் - மோகன்லால் உள்ளிட்ட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை!
நடிகர் மோகன்லால்
  • News18
  • Last Updated: September 22, 2019, 7:46 PM IST
  • Share this:
வீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கில் நடிகர் மோகன்லால் மீது கேரள வனத்துறை சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தேவராவில் உள்ள மோகன்லாலுக்கு சொந்தமான சிந்தமான வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் யானை தந்தங்கள் இருந்ததைக் கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பின்னர், யானை தந்தங்கள் மோகன்லாலுக்கு பரிசாக கிடைத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதை எதிர்த்து பவுலோஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மீறப்பட்டிருபதாகவும், வனத்துறையினரே அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு வனத்துறைக்கு உத்தரவிட்டது. உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியது.

இந்த விவகாரத்தில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் நடிகர் மோகன்லால், ஓலூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், திருப்புனித்துறாவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னையைச் சேர்ந்த நளினி ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது கேரள பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வனத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.அதில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் நடிகர் மோகன்லால் உள்பட 4 பேர் விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க: தமிழன் முதல் பிகில் வரை! தளபதி விஜய் பேசிய அரசியல்

First published: September 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading