உருவாகிறது த்ரிஷ்யம் 2: மோகன்லால் அறிவிப்பு..!

கேரள அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தவுடன் த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

உருவாகிறது த்ரிஷ்யம் 2: மோகன்லால் அறிவிப்பு..!
த்ர்ஷ்யம் 2
  • Share this:
த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை நடிகர் மோகன்லால் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் த்ரிஷ்யம். மலையாளத்தில் பிரமாண்ட வெற்றி பெற்ற இந்தப் படம் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

க்ரைம் திரில்லர் பாணி கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. முதல் பாகத்தின் இறுதியில் தன் குடும்பத்தால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரியின் மகனை புதிதாக கட்டப்பட்ட காவல்நிலையத்தின் அடியில் புதைத்து விட்டு திரும்புவார் மோகன்லால். அதை அந்த ஊருக்கு புதிதாக வரும் போலீஸ் அதிகாரி கண்டுபிடிக்கிறாரா என்பதே இரண்டாவது பாகமாக உருவாகும் என்று கூறப்படுகிறது.


தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் மோகன்லால் த்ரிஷ்யம் 2 உருவாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு முன்னர் ஜீத்து ஜோசப் - மோகன்லால் கூட்டணி இணைந்து ராம் என்ற படத்தில் பணிபுரிந்து வந்தனர். அந்தப் படத்தின் படப்பிடிப்பில் 50% வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. நிலைமை சீராக இன்னும் பல நாட்களாகும் என்பதால் ராம் படத்துக்கு முன்பாக த்ரிஷ்யம் 2 படத்தை உருவாக்க திட்டமிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரள அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்தவுடன் த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் த்ரிஷ்யம் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களும் சில புதிய நடிகர்களும் இத்திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading