ஜீத்து ஜோசப் படத்தை மீண்டும் தொங்கலில்விட்ட மோகன்லால்...!

மோகன்லால்

2009 இல் ஷாஜி கைலாஷின் ரெட் சில்லீஸ் படத்தில் மோகன்லால் நடித்திருந்தார். 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளார்.  

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இரு படங்களை அறிவித்த நிலையில், அந்தப் படங்களை மீண்டும் ஓரம் வைத்து வேறு இயக்குனரின் படத்திற்கு கால்ஷீட் தந்துள்ளார் மோகன்லால்.

ஜீத்து ஜோசப்பின் த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 படங்கள் மோகன்லாலின் மகுடத்தில் மேலுமொரு சிறகாக அமைந்தன. அவரது இயக்கத்தில் ராம் என்ற படத்தை மோகன்லால் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதில் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தமானார். பின்னர் திடீரென ராம் படத்தை தள்ளிவைத்து டுவெல்த் மேன் என்ற படத்துக்கு பூஜை போட்டனர். ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிக்க, ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், படத்துக்கான அரங்கு அமைக்கும் பணிகளும் தொடங்கின

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், டுவெல்த் மேன் படத்தை தள்ளி வைத்து, பிருத்விராஜின் ப்ரோ டாடி படத்தில் நடிக்க ஹைதராபாத் சென்றார் மோகன்லால். அதன் படப்பிடிப்பு தற்போது முடிந்த நிலையில், மோகன்லால் டுவெல்த் மேனில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக ஜீத்து ஜோசப்புக்கு கால்ஷீட் தராமல், ஷாஜி கைலாஷ் இயக்கும் படத்துக்கு கால்ஷீட் தந்துள்ளார். இந்தப் படத்தையும் ஆண்டனி பெரும்பாவூரின் ஆசீர்வாத் சினிமாவே தயாரிக்கிறது. ராஜேஷ் ஜெயராம் படத்தின் ஸ்கிரிப்டை எழுதியுள்ளார்

Also read... அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் த்ரில்லர் திரைப்படம்...!

2009 இல் ஷாஜி கைலாஷின் ரெட் சில்லீஸ் படத்தில் மோகன்லால் நடித்திருந்தார். 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளார்.  
Published by:Vinothini Aandisamy
First published: