த்ரிஷ்யம் 2 படத்தைத் தொடர்ந்து மீண்டும் மோகன்லால் ஜோடியாக நடிக்கிறார் மீனா, இந்தப் படத்தை நடிகர் பிருத்விராஜ் இயக்குகிறார்.
பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமான லூசிபரில் மோகன்லால் நாயகனாக நடித்தார். அந்தப் படம் பம்பர் ஹிட்டானது. இதன் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார். லூசிபரின் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக் பிருத்விராஜ் அறிவித்திருந்தார். இந்நிலையில், மோகன்லால் நடிப்பில் முற்றிலும் புதிய கதையில் ’ப்ரோ டாடி’ என்ற படத்தை இயக்குகிறார். இயக்குனராக இது அவருக்கு இரண்டாவது படம்.
ப்ரோ டாடி குறித்து பேசிய பிருத்விராஜ், இதுவொரு பேமிலி ட்ராமா. ஸ்ரீஜித்தும், பிபினும் இணைந்து இதன் கதையை எழுதியிருக்கிறார்கள். அனைவரையும் இது புன்னகைக்கவும், சிரிக்கவும் வைக்கும் என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ப்ரோ டாடியை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்க, மோகன்லால் ஜோடியாக மீனா நடிக்கிறார். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் தொடர்ந்து நாயகியாக மலையாளத்தில் மீனா நடித்து வருகிறார். இந்த வருடம் வெளியான
த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்தவர் மீண்டும் அந்த வாய்ப்பை பெற்றுள்ளார். இவர்களுடன்
கல்யாணி ப்ரியதர்ஷினி, முரளி கோபி, சௌபின் ஷகிர், லாலு அலெக்ஸ் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.
லூசிபர் ஒரு அரசியல் க்ரைம் த்ரில்லர். அதற்கு முற்றிலும் மாறான பேமிலி ட்ராமாவாக ப்ரோ டாடி தயாராகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.