ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு படத்தில் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்!

துணிவு படத்தில் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்!

பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம்

பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம்

துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு திரைப்படத்தில் நிஜ பத்திரிகையாளர் மைபா நாராயணன் கதாபாத்திரத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் நடித்துள்ளார்.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது.

துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் நிலையில் படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளது. முன்னதாக படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட தொடங்கியுள்ளனர்.

அதில் முதல் அறிவிப்பாக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரத்தின் கதாபாத்திரத்தை வெளியிட்டுள்ளனர். துணிவு திரைப்படத்தில் அவர் பிரபல பத்திரிகையாளர் மைபா நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் பணத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதில் முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் மோகனசுந்தரம் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தை நிஜ பத்திரிகையாளர் நாராயணனை மையப்படுத்தி வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் எச்.வினோத்.

முதல் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்த கதாபாத்திரங்களை வெளியிட உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு தணிக்கையில் யுஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. துணிவு திரைப்படத்தில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர்  உடன் வீரா, பால சரவணன், ஜி.எம் சுந்தர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் பக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

Also read... தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷல்... கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் பிரியாமணியின் பாமகலாபம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Thunivu