ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினி vs விஜய் : யார் சூப்பர் ஸ்டார் ? - நடிகர் மோகன் கொடுத்த விளக்கம்!

ரஜினி vs விஜய் : யார் சூப்பர் ஸ்டார் ? - நடிகர் மோகன் கொடுத்த விளக்கம்!

விஜய் - மோகன் - ரஜினிகாந்த்

விஜய் - மோகன் - ரஜினிகாந்த்

அப்போதிலிருந்து இப்போது வரையில் சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு போட்டி உள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த சில ஆண்டுகளாக மோகன் நடிப்பில் பெரிதாக எந்தப் படங்களும் வெளியாகவில்லை. இருப்பினும் அவர் தனது பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடம்பிடித்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு 'ஹரா' என்ற படத்தில் மோகன் ஹீரோவாக நடித்துள்ளார். விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள இந்தப் படத்தில் குஷ்பு, யோகி பாபு, சாருஹாசன் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் மோகன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவரிடம் பத்திரிகையாளர்கள் சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மோகன், ''அப்போதிலிருந்து இப்போது வரையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு போட்டி உள்ளது. பல ஸ்டார்கள் இருக்கலாம். ஆனால் அந்த பட்டம் யாரிடம் உள்ளது என பார்க்க வேண்டும். அது ரஜினி சார் வசம் மட்டும்தான் உள்ளது'' என்றார்.

தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் வாரிசு படமும், நடிகர் அஜித் குமாரின் துணிவு படமும் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே யார் நம்பர் 1, யார் சூப்பர் ஸ்டார் என்பது போன்ற சர்ச்சைகள் உருவாகிவருகிறது. யார் நம்பர் 1 என்பதை நிரூபிக்கவே விஜய் படத்துடன் தனது படத்தை அஜித் வெளியிட முடிவு செய்துள்ளார் என்று ஒரு தகவல் பரவியது.

மற்றொரு பக்கம் பத்திரிகையாளர் பிஸ்மி விஜய்தான் சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று தனது யூடியூப் பக்கத்தில் பேசியிருந்தார். இதனையடுத்து பிஸ்மியின் வீட்டை ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சூர்ய வம்சம் வெற்றி விழாவிலேயே பேசியதாக குறிப்பிட்டார். இதனால் சமூக வலைதளங்களில் யார் சூப்பர் ஸ்டார் என பெரும் விவாதங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Rajinikanth