படம் இல்லையென்றால் இப்படித்தான் ஆளாளுக்கு குதிரை ஏறுவார்கள் போலிருக்கிறது. மாதவனை வில்லனாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மோகன் ராஜா.
மலையாளத்தில் வெளியான லூசிபரின் தெலுங்கு ரீமேக் காட்ஃபாதரை இயக்கி வருகிறார் மோகன் ராஜா. மோகன்லால் நடித்த வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். லூசிபரில் வில்லன் வேடத்தை ஏற்று செய்தவர் விவேக் ஓபராய். காட்ஃபாதரில் இந்த வேடத்தை செய்ய முதலில் தேர்வு செய்யப்பட்டவர் மலையாள நடிகர் பிஜு மேனன். நல்ல நடிகர். ஆனால், விவேக் ஓபராய் போன்ற அழகான ஹீரோ இந்த வேடத்தை செய்தால் நன்றாக இருக்கும் என பலரும் அபிப்ராயப்பட்டதால் பிஜு மேனனை வெயிட்டிங்கில் வைத்து மாதவனை வில்லனாக்க முடிவு செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
லிங்குசாமியின் தெலுங்குப் படத்தில்
மாதவன் வில்லனாக நடிக்கிறார் என்று சில வாரங்கள் முன்பு எழுதினர். மாதவனும்,
லிங்குசாமியும் அதனை மறுத்தனர். பிறகு ஆதியை வில்லனாக ஒப்பந்தம் செய்தனர். இப்போது காட்ஃபாதரில் மாதவனை வில்லனாக்க முயற்சிக்கின்றனர்.
கண்டிப்பாக இந்த
வில்லன் கட்டத்துக்குள்ளும் மாதவன் சிக்க மாட்டார் என்பதே அவரை அறிந்தவர்களின் கருத்து. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.