ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சக்கைப்போடு போடும் காட்பாதர்... மீண்டும் தெலுங்கில் படம் இயக்கும் மோகன் ராஜா

சக்கைப்போடு போடும் காட்பாதர்... மீண்டும் தெலுங்கில் படம் இயக்கும் மோகன் ராஜா

மோகன்ராஜா

மோகன்ராஜா

இந்த நிலையில் இயக்குநர் மோகன்ராஜாவிற்கு மேலும் சில தெலுங்கு திரைப்பட வாய்ப்புகள் வந்துள்ளன. அதேபோல் இந்தி திரை உலகிலும் அவருக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட்பாதர் படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு படத்தை இயக்க மோகன் ராஜாவிற்கு வாய்ப்பு வந்துள்ளது.

ஜெயம் படம் மூலமாக அறிமுகமான மோகன் ராஜா, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். இந்த நிலையில் மலையாளத்தில் வெற்றியடைந்த லூசிபர் திரைப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி, சல்மான்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஆந்திர பகுதிகளில் அந்த படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

இந்த நிலையில் இயக்குநர் மோகன்ராஜாவிற்கு மேலும் சில தெலுங்கு திரைப்பட வாய்ப்புகள் வந்துள்ளன. அதேபோல் இந்தி திரை உலகிலும் அவருக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

' isDesktop="true" id="818916" youtubeid="9GPaj0OW-No" category="cinema">

Read More: அழகூரில் பூத்தவளே! வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

இருந்தாலும் காட்பாதர் படத்தை தொடர்ந்து அவர் அடுத்த தெலுங்கு திரைப்படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் என கூறப்படுகிறது. அந்த திரைப்படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த லூசிபர் திரைப்படத்தை தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் இயக்குனர் மோகன் ராஜா ரீமேக் செய்தார். அதுவும் லூசிபர் கதையை தெலுங்குக்கு ஏற்றவாறு மாற்றம் செய்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க, பாலிவுட் நடிகர் சல்மான்கான் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல் நயன்தாரா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வெளியாகி தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

காட்ஃபாதர் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த்,  இயக்குநர் மோகன் ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தி உள்ளார்.காட்ஃபாதர் திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Read More: தாய்லாந்தில் சீறும் அஜித்தின் பைக்.. மீண்டும் ட்ரிப்பை தொடங்கிய துணிவு ஹீரோ!

நடிகர் பிரித்வி ராஜ் இயக்குநராக அறிமுகமான படம் ‘லூசிஃபர்’. 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான இந்தப் படத்தில் மோகன்லால் நடித்திருந்தார். விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அரசியல்வாதியின் மறைவுக்குப் பிறகு அவரது மருமகனுக்கும், வளர்ப்பு மகனுக்கும் இடையே நடக்கும் விஷயங்களை சுவாரஸ்யமான திரைக்கதையில் கூறியிருந்தார் ப்ரித்வி ராஜ். அதோடு வசூலிலும் சாதனை படைத்தது.

First published:

Tags: Telugu, Telugu movie