Home /News /entertainment /

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மோகன்லால், மம்முட்டி படங்கள்

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மோகன்லால், மம்முட்டி படங்கள்

மோகன் லால்

மோகன் லால்

Mohanlal Movie : பிருத்விராஜ் இயக்கி நடித்திருக்கும் ப்ரோ டாடி வரும் 26 சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் அதிக பாதிக்குள்ளான மாநிலம் என்றவகையில் கேரளாவில் கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டன. திரையரங்குகள் மாதக்கணக்கில் மூடப்பட்டன. மலையாள சினிமாவின் மீட்சிக்கான ஒரே வழியான ஓடிடியை மலையாளிகள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டனர்.

சென்ற வருட ஆரம்பத்தில் மோகன்லாலின் த்ரிஷ்யம் 2 நேரடியாக ஓடிடியில் வெளியானது. தொடர்ந்து பகத் பாசிலின் ஜோஜி, இருள், மாலிக் படங்கள் வெளியாகின. பிருத்விராஜின் கோல்ட் கேஸ், குருதி படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. டிசம்பரில் டொவினோ தாமஸின் மின்னல் முரளி வெளியாகி ஓடிடி தளத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. திலீபின் கேஷு ஈ வீடின்டெ நாதன் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

இந்த வருடமும் முதல் மெகா கணக்கை மோகன்லாலே தொடங்குகிறார். அவரது நடிப்பில் பிருத்விராஜ் இயக்கி நடித்திருக்கும் ப்ரோ டாடி வரும் 26 சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நகைச்சுவை திரைப்படமான இதில் மோகன்லால், மீனா கணவன், மனைவியாக நடிக்க, அவர்களது மகனாக பிருத்விராஜ் நடித்துள்ளார்.

also read : தனுஷ் - ஐஸ்வர்யாவின் ஃபேமிலி போட்டோஸ்

மம்முட்டியின் படங்கள் இதுவரை நேரடி ஓடிடி வெளியீட்டை பெறவில்லை. அந்தக் குறையும் இந்த வருடம் தீரப்போகிறது. மம்முட்டி நடித்துள்ள க்ரைம் த்ரில்லர் படமான புழு நேரடியாக சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அறிமுக இயக்குனர் ரதீனா புழுவை இயக்கியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். முக்கியமான வேடத்தில் பார்வதி நடித்துள்ளார். கசாபா படத்தில் மம்முட்டி நடித்திருந்த வேடத்தையும், அவர் பேசிய உரையாடல்களையும் பார்வதி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதற்குப் பதிலடியாக மம்முட்டி ரசிகர்கள் பார்வதியை மோசமாக விமர்சித்தது சர்ச்சையானது.



எனினும் புழுவில் இவர்கள் இணைந்து நடித்துள்ளனர். புழுவில் மம்முட்டியின் கதாபாத்திரத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் அதிர்ந்து போவார்கள். மம்முட்டி இப்படியொரு கதாபாத்திரத்தில் இதுவரை நடித்ததில்லை என பார்வதி கூறியிருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இவை தவிர மோகன்லாலின் டுவெல்த் மேன் உள்பட பல முக்கிய படங்கள் இந்த வருடம் நேரடி ஓடிடி வெளியீடாக வரவிருக்கின்றன.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Mohanlal

அடுத்த செய்தி