முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'பகாசூரன்' விமர்சனம்: 'யாரோடும் ஒப்பிடாதீங்க...' - ரசிகர்களுக்கு இயக்குநர் மோகன்ஜி வேண்டுகோள்

'பகாசூரன்' விமர்சனம்: 'யாரோடும் ஒப்பிடாதீங்க...' - ரசிகர்களுக்கு இயக்குநர் மோகன்ஜி வேண்டுகோள்

செல்வராகவன் - மோகன்.ஜி

செல்வராகவன் - மோகன்.ஜி

ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபடுதல் என இந்தப் படத்தில் சொல்லப்படுகின்ற விஷயங்கள் நாம் செய்திகளில் நாம் ஏற்கனவே பார்த்துவருவதுதான்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி, ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான பகாசூரன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மோகன்.ஜியின் கடந்த படங்களைப் போலவே இந்தப் படமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தில் கல்வி தந்தை என சில நிஜ மனிதர்களை குறிப்பிட்டிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இயக்குநர் மோகன் ஜி அளித்த பேட்டியில், “ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபடுதல் என இந்தப் படத்தில் சொல்லப்படுகின்ற விஷயங்கள் செய்திகளில் நாம் ஏற்கனவே பார்த்துவருவதுதான். இது மக்களுக்கு பெரும் கோவத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அது மக்களால் என்ன தீர்வும் காண முடியவில்லை. ஆனால் ஒரு இயக்குநராக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் இது மாதிரி நடக்காது.

யார் கூடவும் இந்தப் படத்தை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். இது மாதிரி தான் திரௌபதியில் என் மேல தப்பான முத்திரை விழுந்தது. இந்த படத்துல அந்த மாதிரி தவறாக ரிலேட் பண்ணாமல், சினிமாவாக பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், அயராத உழைப்பிற்கும், புதிய முயற்சிகளுக்கும் என்றும் தோள் கொடுக்கும் ரசிகர்களுக்கு கோடான கோடி நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Selvaraghavan