ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மோகன் ஜி-யின் அடுத்தப்பட டைட்டில் பகாசூரன்!

மோகன் ஜி-யின் அடுத்தப்பட டைட்டில் பகாசூரன்!

பகாசூரன்

பகாசூரன்

இதில் இயக்குநர் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இயக்குநர் மோகன் ஜி-யின் அடுத்தப் படத்திற்கு பகாசூரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

'பழைய வண்ணாரப்பேட்டை' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதையடுத்து 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' ஆகியப் படங்களை இயக்கினார். இந்த இரு படங்களிலும் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படங்கள் வெளியாகி ஒருபுறம் சர்ச்சைகளை கிளப்பியது. ஆனால் அதே நேரத்தில் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தனது அடுத்தப் படத்தை இயக்க தயாராகி விட்டார். 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிக்கும் இந்தப் படத்துக்கு 'பகாசூரன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் இயக்குநர் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

13 கோடி செக் மோசடி வழக்கில் இன்றும் ஆஜராகாத நடிகர் ராஜசேகர் அவரது மனைவி ஜீவிதா ராஜசேகர்

இதற்கிடையே 'பகாசூரன்' படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற வாக்கியத்துடன் மகாபாரதம் புத்தகம் இடம்பெற்றுள்ளது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் பகாசூரன் படம் திரையரங்கில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Tamil Cinema