• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வலிமை அப்டேட்டை மறக்க முடியாது - மனம் திறந்த மொயின் அலி!

வலிமை அப்டேட்டை மறக்க முடியாது - மனம் திறந்த மொயின் அலி!

மொயின் அலி

மொயின் அலி

மொயின் அலி தனது டெஸ்ட் கெரியரில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

  • Share this:
    ரசிகர் ஒருவர் தன்னிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்டதை தன்னால் மறக்கவே முடியாது என சி.எஸ்.கே அணியில் விளையாடி வரும் மொயின் அலி தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருபவர் மொயின் அலி. இவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகவும் தெரிவித்தார். மொயின் அலி, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், மொயின் அலி தனது டெஸ்ட் கெரியரில் நிகழ்ந்த மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

    அதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெஸ்ட் போட்டியின் போது ரசிகர் ஒருவர் திடீரென தன்னை அழைத்து ‘வலிமை’ அப்டேட் என கேட்டதையும், அதை எப்போதும் தன்னால் மறக்க முடியாது என்றும் மொயின் அலி கூறியுள்ளார்.



    இந்த வீடியோவை கிரிக்கெட் வீரர் அஸ்வினும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு ‘அப்பவே சொன்னேன்’ என்று குறிப்பிட்டு சிரிக்கும் எமோஜிகளையும் பதிவிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: